செய்திகள்

காஷ்மீர்:370 வது சட்டப்பிரிவு ரத்தானதை எதிர்க்கும் மனுக்கள் மீது ஆகஸ்ட் முதல் விசாரணை!

ஜெ.ராகவன்

ம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு ரத்துச் செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கச் செய்யும் 370-வது சட்டப்பிரவை ரத்துச் செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன் மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 20-க்கும் மேலான வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நபர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த நிலையில் தலைமை நீதிபதி சந்திரசூட் இந்த அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ள மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற

நாட்களில் விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் ஜூலை 25 ஆம் தேதிக்குள் அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்ய வேண்டும் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணையின்போது ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பிரமாண பத்திரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதில் உள்ள அரசியல் சாசனம் தொடர்பான விஷயங்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இதனிடையே மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன், ஐஏஎஸ் அதிகாரி ஷாஃபஸல் மற்றும் முன்னாள் மாணவர் செயற்பாட்டாளர் ஷீலா ரஷீத் ஆகியோர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அவர்களின் பெயர்களை மனுதாரர்கள் பட்டியலிலிருந்து நீக்கும்படி நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவின்படி கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்தானது. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT