செய்திகள்

தோண்டத் தோண்டப் பிணங்கள். கென்ய பாதிரியாரின் வெறிசெயல்.

கிரி கணபதி

ட்டினி இருந்தால் கடவுளை சந்திக்கலாம் என்று கூறி, பலரை பட்டினி இருக்கச் செய்து, கொலை செய்த கென்யாவைச் சேர்ந்த மத போதகரான 'மெக்கன்சி' என்பவரது பண்ணை வீட்டில், தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 400ஐ கடந்தது. மேலும் 600 நபர்களுக்கு மேல் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. 

கிழக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு பகுதிதான் கென்யா. அங்கு வசிக்கும் மத போதகர் கடவுள் பெயரில் பலரைக் கொன்றுவிட்டார் என்ற செய்தி சமீப காலமாகவே வெளிவந்து அதிர்ச்சி தந்து வருகிறது. இவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஏராளமான நபர்கள் பார்ப்பதற்கு உடல் மெலிந்த நிலையில் இருக்கிறார்கள். அதில் 4 பேர் இறந்து விட்டார்கள் என போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து பண்ணை வீட்டில் அதிரடி சோதனை செய்த போலீசார், பண்ணைக்கு சொந்தமான நிலத்தைத் தோண்டியபோது சடலங்கள் தென்பட்டது. தொடக்கத்தில் தோண்டும் போது 21 சடலங்கள் மட்டுமே கிடைத்த நிலையில், பின்னர் மேலும் 26 சடலங்கள் கிடைத்தன. 

அங்கு கிடைத்த எல்லா உடல்களிலும் பிளாஸ்டிக் கவர் சுற்றப்பட்டிருந்தது. இவர்கள் ஏன் இறந்தார்கள் என போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்தப் பண்ணையில் இருந்தவர்களிடம் நீங்கள் பட்டினி இருந்தால் இயேசுவை சந்திக்கலாம் என அந்த மதபோதகர் கூறியிருக்கிறார். அதை அவர்களும் நம்பி பல நாட்கள் பட்டினிக் கிடந்து இறந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பண்ணை நிலத்தை தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 403 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில் 12 சடலங்கள் சமீபத்தில் இறந்தவர்களின் சடலங்கலாகும். மேலும் 600 பேருக்கு மேல் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. 

ஏற்கனவே இந்த பாதிரியார் மீது சட்டவிரோத பணமாற்றம், பயங்கரவாதம் உள்ளிட்ட புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், இனப்படுகொலை என்றும் தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பாதிரியாருடன் அவரது மனைவி மற்றும் இவர்களுக்கு உதவி புரிந்த 16 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  

இவரைப் பற்றி மேலும் விசாரிக்கையில், இவர் ஒரு டாக்ஸி டிரைவர் என்பதும், பேசியே அனைவரையும் மூளைச்சலவை செய்வதில் கெட்டிக்காரர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவருடைய கவர்ச்சிகரமான பேச்சை நம்பியே இவருக்கு ஆதரவாக அனைவரும் சேர்ந்துள்ளனர். இயேசுவைப் பார்க்கலாம் என்று சொல்லியே தன்னை நம்பி வந்த அனைவரையும் பட்டினி போட்டுக் கொன்றுள்ளார். அவர்கள் யாரும் பண்ணை வீட்டிலிருந்து தப்பிச் செல்லாமல் இருக்க 16 பேர் கொண்ட ஆயுதக் குழுவையும் பாதுகாப்பிற்காக போட்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட படுபாதக செயலை மெக்கன்சி செய்தும் அவரை பின்பற்றுவோர் சிலர் அவரை நம்பி வருகின்றனர். விரைவில் அவர்கள் இயேசுவைப் பார்க்கப் போவதாகவும் சொல்லுகிறார்களாம். அப்படிப்பட்ட 65 பேர் மீதும் தற்கொலைக்கு முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 400க்கும் மேற்பட்ட நபர்களைக் கொன்ற இந்தப் பாதிரியாரை தூக்கிலிட வேண்டுமென அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

SCROLL FOR NEXT