Minister M.P.Saminathan 
செய்திகள்

தியாகிகள் மற்றும் தலைவர்கள் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட முடிவு: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

மிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் தியாகிகள் மற்றும் தலைவர்களின் பிறந்த நாட்கள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

1. அடுத்த ஆண்டு முதல் ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும்.

2. அதேபோல், அடுத்த ஆண்டு முதல் ஜனவரி 25ம் நாள் தாய் மொழி தியாகிகள் நாளாகக் கடைபிடிக்கப்படும்.

3. இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளான ஜூலை 7ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

4. சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாள் பிறந்த நாளான ஜூன் 1ம் தேதி கடலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

5. மதுரை, உசிலம்பட்டி பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த 16 வீரத் தியாகிகளின் நினைவைப் போற்றும் விதமாக ஏப்ரல் 3ம் தேதி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படும்.

6. சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்த நாளாக அக்டோபர் 9ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

7. அல்லாள இளையநாயக்கர் பிறந்த நாளான தைத் திங்கள் 1ம் தேதி நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

8. சுதந்திரப் போராட்டத் தியாகி கு.மு.அண்ணல் தங்கோ பிறந்த நாளான ஏப்ரல் 13ம் தேதி வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

9. முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் ப.சுப்பராயன் பிறந்த நாளான செப்டம்பர் 11ம் தேதி சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

10. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

11. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் பிறந்த நாளான ஜூலை 7ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

12. ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த நாளான மார்ச் 1ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

13.  சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் பிறந்த நாளான ஜூன் 1ம் தேதி திருச்சி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

14. தமிழறிஞர் மு.வரதராசனார் பிறந்த நாளான ஏப்ரல் 25ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

15. எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பிறந்த நாளான செப்டம்பர் 19ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

நித்திய சொர்க்கவாசல் உள்ள கலியுக வேங்கடேச பெருமாள் கோயில் தெரியுமா?

தோஷங்கள், பாவங்கள் போக்கும் பாப விமோசனப் பெருமாள்!

உலகின் எந்தப் பகுதிகளில் பறவைகளை அதிகம் பார்க்க முடியும்!

ஐஸ்கிரீமின் வரலாறு என்ன தெரியுமா? 

ஆயில் இல்லாமல் சமைப்பது ஆரோக்கியம் தருமா?

SCROLL FOR NEXT