Neet exam  
செய்திகள்

நீட் மறுதேர்வு நடத்தப்படும் - தேசிய தேர்வு முகமை தகவல்!

கல்கி டெஸ்க்

கடந்த மே 5 ஆம் தேதி நடந்து முடிந்த நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வை  ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலான இளங்கலை மருத்துவ கல்விக்கான கலந்தாய்வை தொடங்க எவ்வித தடையும் இல்லை என்று  உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல் அளித்துள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை  நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுத்தோறும் நடத்தப்படும் இந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு கடந்த மே 5 தேதி அன்று நடத்தப்பட்டது. இந்த தேர்வை  23 லட்சம் பேர் 4750 மையங்களில் எழுதினர். 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டது.

பொதுவாக இந்த தேர்வில் ஒரு கேள்விக்கு விடை சரி என்றால் 4 மதிப்பெண்களும் விடை தவறு என்றால் 5 மைனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படும். அந்த வகையில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி அன்று நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் 67 மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

இந்த தேர்வு முடிவுகளில் பல மாணவர்கள் 718, 719 ஆகிய மதிப்பெண்களை பெற்றுள்ளனர். தவறான 1 கேள்விக்கே 5 மதிப்பெண்கள் மைனஸ் செய்யப்படும் என்றால் 715 மதிப்பெண்கள் அல்லவா பெற வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.

அதற்கு தேசிய தேர்தல் முகமை "தேர்தல் நேரங்களில் ஏதேனும் காரணங்களுக்காக நேரம் வீணாகும் போது அதற்கு ஈடாக கருணை மதிப்பெண் வழங்கப்படும். எனவே இவ்வாறு  வழங்கப்படும் மதிப்பெண்கள் அதன் அடிப்படையில் தான்.மேலும் இதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்பட்டது" என்று விளக்கம் அளித்தது.

ஆனால் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே தேர்வை ரத்து செய்து, புதிய தேர்வு நடத்த கோரி  மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் மாணவர்களால் நடத்தபட்டது.

இந்த பிரச்சனை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்ததில், "தேர்வின் நோக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, என்டிஏவுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.  

அந்த வகையில் இன்று, தேசிய தேர்வு முகமை "நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு மட்டும் வரும் 23-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும். அதற்கான தேர்வு முடிவுகள் வரும் 30 ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்" என்று உச்சநீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளது. 

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT