News 5 
செய்திகள்

News 5

கல்கி டெஸ்க்

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு!

LPG

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.31 குறைக்கப்பட்டு ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Today rain

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தீபாவளி - ரயில் டிக்கெட் முன் பதிவு இன்று தொடங்கியது!

train ticket

இந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று தீவாளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்காக, அக்டோபர் 29 ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலே தென்மாவட்டங்களுக்கு செல்லும் பாண்டியன், நெல்லை, செங்கோட்டை ஆகிய இரவு நேர ரயில்களில் முன்பதிவு நிறைவடைந்தது. மேலும் அக்டோபர் 30ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்களியுள்ளது.

“சமஸ்கிருதத்தை நாம் மதிக்க வேண்டும் என்பது இன்றைய தேவை” -பிரதமர் மோடி

Modi

"சமஸ்கிருதத்தை நாம் மதிக்க வேண்டும் என்பது இன்றைய தேவை. அதை நாம் அன்றாட வாழ்க்கையுடன் பிணைத்துக் கொள்ள வேண்டும். இந்தியர்களின் அறிவு முன்னேற்றத்திற்கும் விஞ்ஞான முன்னேற்றத்திற்கும் சமஸ்கிருதம் முக்கிய பங்கு வகித்துள்ளது" என நேற்று 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உலகக் கோப்பை டி20 தொடரை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

T20

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 176/7 ரன்கள் குவித்தது. பின்பு பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 169/8 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  இந்நிலையில், உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT