News 5 01/07/24 -1 
செய்திகள்

News 5

கல்கி டெஸ்க்

வெளிநாடு செல்ல விசா கட்டணம் உயர்வு!

visa

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இந்திய மதிப்பில் 39 ஆயிரத்தில் இருந்து 89 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. அதிகப்படியான மக்கள் குடியேற்றத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம், 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

அகழாய்வில், காலச் செம்பு நாணயம் கண்டெடுப்பு!

Excavation

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மருங்கூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், 23.3 மி.மீ விட்டமும், 2.5 மி.மீ தடிமனும், 3 கிராம் எடையும் கொண்ட ராஜராஜ சோழன் காலச் செம்பு நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.

மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு!

The boy died!

திண்டிவனத்தில் உறவினர் வீட்டிற்கு நிகழ்ச்சிக்காகச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம் வேதனை அளிக்கிறது. நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பாப்கார்ன் இயந்திரம் இணைக்கப்பட்டிருந்த சுவிட்ச் பாக்ஸில் கை வைத்த மோத்திஸ் என்ற 5வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்குச் அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெற்றியை கொண்டாடும்போது ஏற்பட்ட விபரீதம்!

The boy died!

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் இந்திய அணியின் டி20 உலக கோப்பை வெற்றியை கொண்டாட சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு. பட்டாசு மீது டம்ப்ளரை வைத்து அந்த சிறுவர்கள் வெடித்துள்ளனர். அப்போது டம்ப்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த தீபக் தாக்கூர் என்ற சிறுவனின் வயிற்றில்  குத்தியுள்ளது. சிறுவனை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி நாடு  திரும்புகிறது!

Indian team won the title of champion

இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் நாளை நாடு திரும்ப உள்ளதாக பி.சி.சி.ஐ தகவல் தெரிவித்துள்ளது. பெரில் சூறாவளி காரணமாக நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT