News 5  
செய்திகள்

News 5 - (04-07-2024) பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!

கல்கி டெஸ்க்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள்!

British tamillargal

650 தொகுதிகளைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில் நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் ஆகிய தமிழர்கள் களம் காண்கின்றனர். பிரிட்டன் தேர்தலில் தமிழர்கள் அதிகம் பேர் களம் காண்பது இதுவே முதல்முறையாகும்.

தொடர்ந்து மழைக்கு வாய்ப்புள்ளது - வானிலை ஆய்வு மையம்!

Rain

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

"அரசியல் வாதிகள்தான் 'நீட்'டை ஏற்க மறுக்கின்றனர்" - தமிழிசை சவுந்தரராஜன்!

tamilisai soundararajan

திருவொற்றியூரில் பேசிய பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், "நீட்டை மாணவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராகி விட்டனர். ஆனால் அரசியல்வாதிகள் தான் ஏற்க மறுக்கின்றனர்.  நீட்டால் தான் அரசுப் பள்ளியில் படித்த ஏழை மாணவர்களால் கூட மருத்துவம் படிக்க முடிகிறது" என கூறியுள்ளார்.

நடத்துநர்களுக்குப் பரிசு - போக்குவரத்துத்துறை அறிவிப்பு!

Gift for Conductors

Credit Card, Debit Card, QR Code போன்ற டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் அதிக டிக்கெட் விற்பனை செய்யும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக நடத்துநர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

டி-20 உலகக்கோப்பையுடன் டெல்லி வந்த இந்திய அணிக்கு, வெற்றிக் கொண்டாட்டம்!

t20 festival

2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் சுமார் 17 ஆண்டுகள் கழித்து இந்திய அணி, டி20 உலக கோப்பையை இந்த ஆண்டு வென்றுள்ளது. தனி விமானம் மூலம் இந்திய அணி வீரர்கள் டெல்லி வந்த நிலையில், இன்று காலை 11 மணிக்கு இந்திய பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். அதன் பின், இன்று மாலை 4 மணிக்கு  டி20 உலக கோப்பையை வைத்து, மும்பை நரிமண் பாயிண்டில் இருந்து வான்கிடே மைதானம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்ட பேரணி நடத்தப்பட உள்ளது. இந்த பேரணிக்கு ரசிகர்கள் உற்சாகமாக காத்துள்ளனர்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT