News 5 
செய்திகள்

News 5 – (05.10.2024) ‘SMS-2’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்!

கல்கி டெஸ்க்

‘இஸ்ரேலுக்கு எப்போதும் அமெரிக்கா உதவி செய்யும்’ - அதிபர் ஜோ பைடன்!

Joe Biden

ரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஈரான் தாக்குதலுக்கு எப்படி பதிலடி தருவது என்பது குறித்து இஸ்ரேல் இன்னும் முடிவெடுக்கவில்லை என தாம் கருதுவதாகவும் நட்பு நாடான இஸ்ரேலுக்கு அமெரிக்க எப்போதும் உதவி செய்யும்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும், ‘ஹெஸ்பொல்லா, ஹவுதி, ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடி தர இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா முழு அளவில் முயற்சி செய்தாலும், ஹெஸ்பொல்லா, ஹவுதி போன்ற அமைப்பினரின் நடவடிக்கைகளால் அது சாத்தியமாகவில்லை என ஜோ பைடன் கூறியுள்ளார்.

‘சூரியனில் இருந்து உண்டாகும் காந்தப்புயல் பூமியைத் தாக்கும்’ - நாசா!

solar flares

‘சூரியனில் இருந்து உண்டாகும் காந்தப்புயல் செயற்கைக்கோள்களை தாக்க வாய்ப்புள்ளது’ என நாசா தெரிவித்துள்ளது. கடந்த 2010ம் ஆண்டு முதல் சூரியனை, நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (Solar Dynamics Observatory) என்ற செயற்கைகோள் கண்காணித்து வருகிறது. இந்த செயற்கைகோள் தற்போது ஒரு மிகப்பெரிய சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இதை ஆராய்ந்த நாசா விஞ்ஞானிகள், ‘சூரிய வெடிப்பினால் உண்டாகும் கதிர்வீச்சு, செயற்கைக்கோள்களை மட்டுமல்லாமல், பூமியையும் தாக்கக்கூடும்’ என்று தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான சாகச நிகழ்ச்சி - காவல்துறை அறிவிப்பு!

Chennai Flight Adventure Program

சென்னை மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சி காரணமாக, காமராஜர் சாலையில், காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையே அனுமதி சீட்டுகள் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ மற்றும் MRTS ரயில்களை பயன்படுத்த பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

மேலும், சென்னை மெரினா கடற்கரை அருகே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக  கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரைக்கு 100 சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படும். வழக்கமாக அண்ணா சதுக்கத்திற்கு இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘SMS - 2’ திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் ராஜேஷ்!

Shiva Manasula Shakti

சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் 2ம் பாகம் எடுக்கும் திட்டம் உள்ளது. இதற்கான திரைக்கதையையும் எழுதி வருகிறேன். ஜீவாவிடமும் இது பற்றி பேசி இருக்கிறேன்” என SMS - 2 திரைப்படம் குறித்து இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி!

Women's T20 New Zealand team win

சிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து. துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

காலை உணவை தவறாமல் உண்பதால் கிடைக்கும் 5 நன்மைகள்!

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் நீச்சல் பயிற்சி!

ப்ளீஸ் திருமணத்தில் இந்த 10 தவறுகள் வேண்டாமே! 

காசாவில் ஒரு கிலோ வெங்காயம் ரூ845… ஒருவேளைதான் உணவு… கதறும் மக்கள்!

சமைக்காமலே சாதமாகும் 'மேஜிக் அரிசி!' இதோடா!

SCROLL FOR NEXT