News 5  
செய்திகள்

News 5 – (08.10.2024) குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை!

கல்கி டெஸ்க்

லாவோஸ் நாடு செல்கிறார் பிரதமர் மோடி!

PM MODI

லாவோஸ் நாட்டின் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று, அந்நாட்டுக்குச் செல்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. வருகிற 10 மற்றும் 11ம் தேதி லாவோசில் நடைபெறும் ஆசியான் - இந்தியா மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை!

Action against litterers

சென்னையில் விதிகளை மீறி பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டுபவர்கள் மற்றும் எரிப்பவர்களிடம் உடனடி அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ரோந்து வாகனங்கள் மூலம் இவற்றைக் கண்காணித்து அபராதம் விதிக்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அரியானா சட்டப்பேரவை தேர்தல்: மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி!

Wrestler Vinesh Bhoga wins congress

ரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஜுலானா தொகுதியில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வினேஷ் போகத், பாஜக வேட்பாளரை விட 5,900 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

‘கார் பந்தயத்தில் கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சி’ - ஷாலினி அஜித்குமார்!

Shalini Ajithkumar

"கார் பந்தயத்தில் நீங்கள் மீண்டும் கலந்துக் கொள்வதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களுக்கும், கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்" என ஷாலினி அஜித்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் பந்தயத்தில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை ஓய்வு!

Deepa Karmakar

ந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மகார் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 வயதான தீபா கர்மகார் கடந்த 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4வது இடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். ஆனால், 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் அவர், பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார்.

இந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருந்த இவர், தற்போது விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைத் துருக்கியாக்கி, கேரளாவை ஈராக்காக்கி... என்னங்கடா சொல்லவறீங்க?

ஒரே கனவு இருவருக்கு வேறு வேறு பலன்களைத் தருவது ஏன்?

வீழ்ச்சியடைந்து வரும் ஆந்திரப் பிரதேச மாநில கொண்டபள்ளி பொம்மைகள்... கலை காப்பாற்றப்படுமா?

"காடோ-காடோ !" (Ghado-Ghado) - இந்தோனேஷியா ஸ்பெஷல் ரெசிபி!

தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன் இத முதலில் தெரிஞ்சுக்கோங்க!

SCROLL FOR NEXT