News 5 
செய்திகள்

News 5 - (09-07-2024) ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு!

கல்கி டெஸ்க்

ரஷ்யாவில் பிரதமர் மோடி பேச்சு!

PM Modi

"கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்கள் இருமடங்கு அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. இன்றைய இந்தியா தன்னம்பிக்கையால் மிளிர்கிறது. இந்திய இளைஞர்கள் நாட்டை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்கின்றனர்," என ரஷ்யவாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நீடித்து வரும் உக்ரைன் – ரஷ்யா போர்!

Ukraine-Russia war

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 800 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நேற்று உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒரே நாளில் 36 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலில் சேதமடைந்த மகப்பேறு மருத்துவமனை இடிந்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

"மலைவாழ் மக்களுக்காக ஊட்டியில் புதிய தொழில் நிறுவனம்" - தொழில்துறை அமைச்சர் அறிவிப்பு!

T. R. B. Rajaa

தஞ்சையில் கட்டப்பட்டு வரும் ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, இந்தியாவில் முதல் முறையாக மலைவாழ் மக்களுக்காக ஊட்டியில் ஒரு புதிய தொழில் நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

விராட் கோலிக்கு சொந்தமான கேளிக்கை விடுதி மீது போலீசார் வழக்குப்பதிவு!

Virat shop

பெங்களூரு எம்.ஜி.சாலையில் உள்ள விராட் கோலிக்கு சொந்தமான கேளிக்கை விடுதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 1.30 மணி வரை கேளிக்கை விடுதியை திறந்து வைத்தாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஐசிசி-யின் 2024 ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா.

Jasprit Bumrah

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, ஜூன் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதானது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்மிருதி மந்தனா ஜூன் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT