News 5 
செய்திகள்

News 5 - (10-07-2024) கலைஞர் நினைவு நாணயம் - ஒன்றிய அரசு அனுமதி!

கல்கி டெஸ்க்

இந்தோனேஷியாவில் கனத்த மழையால் நிலச்சரிவு!

Landslide

தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கொரண்டலோ மாகாணத்தில் உள்ள, போன் பொலாங்கோ மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த  சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு ரத்து - மாணவர்கள் அதிர்ச்சி!

Agricultural University

வேளாண் பல்கலைக்கழக முதுநிலை நுழைவுத் தேர்வு கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைப்பெற்றது. இந்நிலையில், தற்போது தொழில்நுட்பக் கோளாறு மற்றும் சாஃப்ட்வேர் பிரச்னைகளால் அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு சென்ற மின்னஞ்சலில், தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தேர்வுக்கு செலுத்திய கட்டணம் திரும்ப தரப்படும் என்றும், மீண்டும் தேர்வுகள் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கலைஞர் நினைவு நாணயம் - ஒன்றிய அரசு அனுமதி!

ka;langar

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர்' டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

டிஜிட்டல் முறையில் டிக்கெட் கட்டணம் - கே.எஸ்.ஆர்.டி.சி அறிவிப்பு!

Digital ticket

பெங்களூர் பேருந்தில், டிக்கெட் கொடுக்கும்போது, நடத்துனர் பயணியர் இடையே சில்லரை பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்காக டிஜிட்டல் முறையில் பயணியர் கட்டணத்தை செலுத்தவதற்கான நடவடிக்கைகளை கே.எஸ்.ஆர்.டி.சி. மேற்கொண்டு வருதாக தெரிவித்துள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி - இந்திய அணி அபார வெற்றி!

T20

இந்தியா- தென் ஆப்பிரிக்காவிற்கு இடையேயான 3வது பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைப்பெற்றது. இந்த போட்டியில், 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று விளையாடிய இந்திய அணி, 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் 88 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT