News 5 
செய்திகள்

News 5 - (10-07-2024) ரஷ்ய பயணத்தை முடித்து, ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி!

கல்கி டெஸ்க்

ரஷ்ய பயணத்தை முடித்து, ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி!

PM MODI

ரஷ்ய பயணத்தை முடித்து, ஆஸ்திரியா சென்றுள்ளார் பிரதமர் மோடி. அங்கு ஆஸ்திரியா நாட்டு இசைக்கலைஞர்கள், நமது தேசிய கீதத்தை இசைத்து மோடியை வரவேற்றுள்ளனர். அதன்பின், பிரதமர் மோடி ஆஸ்திரிய நாட்டு அதிபர் சான்சிலர் கார்ல் நெஹமருடன், இரு நாட்டு உறவு, வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

திரிபுரா HIV பாதிப்பு குறித்து மாநில அரசு விளக்கம்!

HIV

திரிபுராவில் ஒரு கல்லூரியில் 800 மாணவர்களுக்கு HIV தொற்று கண்டறியப்பட்டு, அதில் 47 பேர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் பரவி வருகின்றன என மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால், திரிபுராவில் 2007 முதல் தற்போது வரை 828 மாணவர்கள் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதே சரி.

மெரினா கடலலையில் சிக்கிய சிறுவர்கள்!

merina

மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் கடல் அலையில் சிக்கியுள்ளனர். அதை அறிந்த மெரினா மீட்புக் குழுவினர் உடனடியாக கடலுக்குள் சென்று இருவரின் உயிரையும் காப்பாற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

'தங்கலான்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

thangalaan

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘தங்கலான்' படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்படுகிறது.

7வது இடத்தை பிடித்தார் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்!

Ruturaj

ஐசிசியின் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 13 இடங்கள் முன்னேறி, 7வது இடத்தை பிடித்தார் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இப்பட்டியலில் 2வது இடத்தில் சூர்யகுமார் நீடிக்கிறார். தற்போது டாப் 10 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT