News 5 
செய்திகள்

News 5 - (11-07-2024) திரைப்படமாக உருவாக உள்ள 'வேள்பாரி' நாவல்!

கல்கி டெஸ்க்

இந்தியர்களை விடுவித்த ரஷ்யா!

Russia - india

உக்ரைன் போரில் இந்தியர்களை ஈடுபடுத்த வேண்டாம் என ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதை ஏற்ற ரஷ்ய அதிபர் புதின் உடனடியாக இந்தியர்களை விடுவித்ததோடு, இந்தியர்களை ஒருபோதும் ராணுவத்தில் சேர்க்க விரும்பியதில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

CM

தமிழகத்தில் பொதுமக்களுக்கு அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில், ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023 டிசம்பர் 18-ம் தேதி தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் பின், அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்தது. அதன்படி, தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாளையம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்துள்ளார்.

ரவுடிகளை ஒழிக்க காவல் ஆணையரின் நடவடிக்கை தொடங்கியது!

POlice arun

பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். மேலும், பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கமும் செய்ய வாய்ப்புள்ளது என காவலர்களுக்கு எச்சரித்துள்ளார்.

திரைப்படமாக உருவாக உள்ள 'வேள்பாரி' நாவல்!

velpari

“கொரோனா காலத்தில் மதுரை எம்.பி.சு. வெங்கடேசன் எழுதிய 'வேள்பாரி' நாவலை படித்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனடியாக திரைக்கதை எழுதிவிட்டேன். இதனை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். ஆனால் நடிகர்கள் குறித்து ஏதும் முடிவெடுக்கவில்லை!” என இயக்குநர் சங்கர் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

T20

ஹராரேவில் நடைப்பெற்று வரும் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT