News 5  
செய்திகள்

News 5 (16-08-2024) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட்!

கல்கி டெஸ்க்

M-Pox (குரங்கு அம்மை) தொற்று!

M-Pox

காங்கோ, மத்திய ஆப்பிரிக்கா உள்ளிட்ட 116 நாடுகளில் இதுவரை  M-Pox (குரங்கு அம்மை)  கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் M-Pox வைரஸ் (குரங்கு அம்மை) தொற்று இல்லை. இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால், தமிழக மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என பொதுச்சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது  SSLV-D3 ராக்கெட்!

SSLV-D3 rocket successfully launched from Sriharikota launch pad!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக  விண்ணில் பாய்ந்தது SSLV-D3  (எஸ்.எஸ்.எல்.வி - டி3) ராக்கெட்.  175.5 கிலோ எடை கொண்ட EOS-08 மற்றும் SR டெமோசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் SSLV-D3 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.  இஸ்ரோ புவி கண்காணிப்பு, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்படுவது போன்ற பயன்பாடுகளுக்காக SSLV-D3 ராக்கெட்டை விண்ணில் ஏவியுள்ளது.

ஒடிசாவில் மாதவிடாய் விடுமுறை அறிவிப்பு!

CM Pravati Parida

ஒடிசாவில் அரசு மற்றும் தனியார் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை அறிவித்தார் அம்மாநில துணை முதல்வர் பிரவதி பரிதா. மாதவிடாய் சுற்றின் முதல் அல்லது 2-வது நாளில் இந்த விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இந்த விடுமுறை எடுத்துக்கொள்வது பெண்களின் விருப்பத்தை பொறுத்தது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா- இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடக்கம்!

India-Sri Lanka Passenger Shipping Service Starts Today!

இந்தியா- இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த கப்பல் நாகையில் இருந்து புறப்பட்டு 4 மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை சென்றடையும். சாதாரண கட்டணம் ₹5,000 ஆகவும், பிரீமியம் கட்டணம் ₹7,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கப்பல் சேவையின் முதல் பயணம் காலை 9 மணிக்கு தொடங்கியது.

இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத்திற்கு பதவி உயர்வு!

Promotion for Indian wrestler Aman Sherawat!

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் அமன் செராவத்திற்கு வடக்கு ரயில்வேயில் சிறப்புப் பணி அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT