News 5 
செய்திகள்

News 5- (26-07-2024) கூகுள் மேப்ஸ்-ன் புதிய அப்டேட்!

கல்கி டெஸ்க்

ஒலிம்பிக் போட்டி இன்று பாரிஸில் துவக்கம்!

The Olympic Games start today in Paris!

உலக நாடுகள் பங்கு கொள்ளும் 2024ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் திருவிழா இன்று (ஜூலை 26) பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கோலாகலமாக துவங்கியுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடத்தப்படுகிறது. 33வது முறையாக நடந்துவரும் ஒலிம்பிக் போட்டி இன்று (ஐூலை 26) தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி அன்று நிறைவு பெறுகிறது. இந்த போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இம்முறை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சம எண்ணிக்கையில் பங்கு கொள்வதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள 32 விளையாட்டுகளில் 46 பந்தயங்கள், 324 வகை பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

அதிநவீன ஏவுகணைகளை ரஷ்யா இந்தியாவுக்கு வழங்க உள்ளதாக தகவல்!

Rusia - india

எதிரி நாட்டு போர் விமானங்களையும், அதிவேக ஹைபர்ஸானிக் ஏவுகணைகளையும், வானில் சுட்டு வீழ்த்தக்கூடிய அதிநவீன ஏவுகணைகளையும் ரஷ்யா இந்தியாவிற்கு விரைவில் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி தர ஏதுவாக, 400 கிலோமீட்டர் வரை சென்று வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் 120 ஃபார்ட்டி-என்-சிக்ஸ் ரக ஏவுகணைகளை வாங்க 2019-ல் ரஷ்யா உடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கு மற்றும் உக்ரைன் போரால் ஏவுகணைகள் கிடைப்பது தாமதமான நிலையில், பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தை தொடர்ந்து, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் மேப்ஸ்-ன் புதிய அப்டேட்!

New update of Google Maps!

4 சக்கர வாகன ஓட்டிகள் குறுகலான, போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளை தவிர்த்து அகலமான பாதையில் செல்வதற்கு வழிகாட்ட AI தொழில்நுட்பத்துடன் கூடிய வசதி கூகுள் மேப் செயலியில் விரைவில் அறிமுகமாகிறது. இதன் மூலம் தெருவின் அமைப்பு, சாலையின் அகலம், கட்டிடங்களுக்கு இடையேயான தூரம் போன்ற தகவல்களை அரித்துக்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, தி.மு.க போராட்டம்!

DMK protests, claiming that Tamil Nadu has been neglected in the central budget!

நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் தமிழகம் போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது என கூறி, தி.மு.க சார்பில், நாளை காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தி.மு.க அறிவித்துள்ளது.

'தங்கலான்' திரைப்படத்திற்கு U/A சான்று!

Thangalaan

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. படத்தின் சென்சார் சமீபத்தில் நடந்து முடிந்து, 'தங்கலான்' திரைப்படத்திற்கு U/A சான்று அளிக்கப்பட்டுள்ளது. 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT