News 5  
செய்திகள்

News 5

கல்கி டெஸ்க்

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல்!

Sunita Williams and astronaut Butch Wilmore

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்ற கேப்சூல் விண்கலத்தை போயிங் நிறுவனம் தயாரித்து, கடந்த 5-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது. இதில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு பலமுறை சென்று வந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் அனுப்பப்பட்டனர். திட்டப்படி, அந்த 'ஸ்டார்லைனர்’ விண்கலம் கடந்த 14ம் தேதியே பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அந்த 'ஸ்டார்லைனர்’ விண்கலத்தில் ஹீலியம் கசிவு ஏற்பட்டு பழுதானதால் அவர்களால் திட்டமிட்ட தேதியில் பூமிக்கு திரும்ப முடியவில்லை. தற்போது அவர்களுக்கு விண்வெளியில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் ஜூலை 2 ம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்புபவதற்கான பணியை மேற்கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது.

யுஜிசி நெட் மறுதேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

UGC NET

கடந்த ஜூன் 18 அன்று நடந்த UGC NET தேர்வில் முறைக்கேடு நடந்ததாக கூறி எழுந்த புகாரின் பேரில் தேர்வு நடந்த மறு தினமே நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வை ரத்து செய்த தேர்வு முகமை, மறுத்தேர்வுக்கான தேதியை தற்போது அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நெட் தேர்வுகள் ஆகஸ்ட் 21 மற்றும் செப்டம்பர் 4 தேதிகளில் நடைப்பெறும் என அறிவித்துள்ளது.

பத்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்த சென்னை மெட்ரோ ரயில் சேவை!

metro

2015 ஆம் ஆண்டு ஜூன் 29ம் தேதி, சென்னை கோயம்பேடு, பரங்கிமலை இடையே முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம் இதுவரை 29 கோடி பயணிகள் பயனடைந்துள்ளனர்.

ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த பெண் அதிர்ச்சி!

Online order

கடந்த ஜூன் 12ம் தேதி பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமில் மனிதனில் விரல் ஒன்று கிடந்ததை பார்த்தப் பெண், அச்சமடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பின் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் அந்த தொழிற்ச்சாலையில் DNA சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில், அது தொழிற்ச்சாலையில் பணிப்புரியும் ஓம்கர் என்பவரின் விரல் என கண்டறிந்துள்ளனர்.

டி20 உலக கோப்பை 2024; இறுதி சுற்றில் வெல்லப்போவது யார்?

india vs south africa

2007ம் ஆண்டில் நடந்த முதல் டி20 உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் 2014ல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோல்வியடைந்தது. 2024ல் தென்னாப்பிரிக்க அணி தற்போது முதல்முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்து இந்தியாவுடன் மோதுகிறது. முதல் முறையாக தென்னாப்பிரிக்கா அணி வெல்லுமா? அல்லது இரண்டாவது முறையாக இந்திய வெல்லுமா? என காத்திருந்து தெரிந்துக்கொள்ளுவோம்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT