செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றிய என்.எல்.சி., நிறுவனம்!

பொ.பாலாஜிகணேஷ்

டலூர் மாவட்டம் நெய்வேலியில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில், என்.எல்.சி., இரண்டாவது சுரங்கத்திலிருந்து  பரவனாறுக்கு பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது இதனால் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் அழிந்தன.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி கால்வாய் அமைக்கும் பணியை தடை விதிக்க கோரி ரிட் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை கடந்த 2ம்தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40,000 இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசு மற்றும் என்.எல்.சி., நிறுவனத்திற்கு உத்தரவிட்டது இதை எடுத்து என்.எல்.சி., மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகத்தினர் பயிர் இழப்பீட்டுக்கான காசோலைகளை விவசாயிகளுக்கு நெய்வேலி நில கையகப்படுத்துதல் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ. முன்னியில் நேற்று வழங்கினார்கள்.

மொத்தமுள்ள  141 விவசாயிகளில் 110 விவசாயிகளுக்கு நேற்று 8 லட்சத்து 96 ஆயிரத்து 937 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 31 விவசாயிகள் நெய்வேலியில் உள்ள மாவட்ட வருவாய் அதிகாரி, நிலம் கையகப்படுத்துதல் அலுவலகத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT