ஸ்வான்டே பாபோ 
செய்திகள்

ஸ்வீடன் விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு!

மருத்துவத்துறைக்கு நோபல் பரிசு !

கல்கி டெஸ்க்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று (அக்.,03) அறிவிக்கப்பட்டது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. இந்த வருடம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வான்டே பாபோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

ஸ்வான்டே பாபோ அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றி கண்டுபிடிப்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்புகளுக்காகவே இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

கடலை மாவை முகத்தில் பயன்படுத்துவதற்கு முன் இத தெரிஞ்சுக்கோங்க! 

SCROLL FOR NEXT