செய்திகள்

உலக பாரம்பரிய சின்னங்களாக அஸ்ஸாம் மொய்டம், ஹோய்சாலா கோயில்கள் பரிந்துரை - யூனெஸ்கோவின் முடிவு என்ன?

ஜெ. ராம்கி

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மொய்டம் பிரமிடுகள் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. யுனெஸ்கோவின் நிபந்தனைகளை பூர்த்தி செய்திருப்பதால், மொய்டம் பிரமிடுகளை அங்கீரிக்கும் அறிவிப்பு வெளியாகும் என்று அஸ்ஸாமின் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருக்கிறார்.

அஸ்ஸாமில் உள்ள சிப்சாகர் நகரத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் ஏறக்குறைய 90 மொய்டம் பிரமிடுகள் உள்ளன. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அஸ்ஸாம் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பிரமிடுகள் என்று ஆய்வில் தெரிய வந்தது.

1253ல் முதல் அஹோம் மன்னர் சாவோ லுங் சியுகாபாவால் நிறுவப்பட்ட அஹோமின் முதல் தலைநகரான சாரெய்டியோவில் இவை அமைந்துள்ளன. அதன் காரணமாகவே சாரெய்டியோ மொய்டாம்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

மொய்டம் என்பது அஹோம் அரச குடும்பம் மற்றும் அரசு ஊழியர்களின் கல்லறையின் மேல் கட்டுப்பட்டுள்ள ஒரு மண் மேடு. சாரெய்டியோ பகுதியில் ஏராளமான மொய்டாம் உண்டு. இது தவிர இதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு குடும்பத்தவர்களின் பிரமிடுகள் அமைந்துள்ளன. நிறைய பிரமிடுகள் சிதைந்திருந்தாலும், நல்ல நிலையில் உள்ள பிரமிடுகளும் உண்டு.

கிரேக்க, சீனா நாகரிகம் போல் மறைந்த அரச குடும்பத்தவர்களை ஆடம்பரமான கல்லறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அஸ்ஸாமில் அமைக்கப்பட்டுள்ள பிரமிடுகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. சில அரசர்களின் கல்லறைகளில் அவர்களது குடும்பத்தார்கள், வேலைக்காரர்கள், குதிரைகளும் சேர்த்து புதைக்கப்பட்டுள்ளனர்.

2021ல் யுனெஸ்கோ குஜராத்தின் தோலவீரா அகழ்வாராய்ச்சி தளத்தையும், தெலுங்கானாவில் உள்ள காக்காட்டிய ருத்ரேஸ்வர கோயிலையும் பாராம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. அதையெடுத்து பேளூர், ஹேலபீடு, சோம்நாத்புரா போன்ற ஹோய்சாலா கோயில்களை பாராம்பரியச் சின்னங்களாக அறிவிக்கவேண்டும் என்று சென்ற ஆண்டு கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அஸ்ஸாம் பிரமிடுகளும் பட்டியலில் இணைந்துள்ளன. இதை மத்திய அரசும் யூனெஸ்கோ அமைப்புக்கு பரிந்துரை செய்திருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏராளமான கோயில்கள், வரலாற்றுச் சின்னங்கள் இருந்தாலும் யூனெஸ்கோ அமைப்பு மாமல்லபுரத்தை மட்டுமே கலாச்சார பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. இன்னும் அறிவிக்கப்படவேண்டிய வரலாற்றுச் சின்னங்கள் தமிழ்நாட்டில் இன்னும் நிறைய இருப்பது என்னவோ உண்மைதான்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT