செய்திகள்

இனி Netflix-ல் பாஸ்வோர்ட் ஷேர் செய்தால் கூடுதல் கட்டணம்.

கிரி கணபதி

OTT தளங்களில் பிரபலமான Netflix, தனது பாஸ்வேர்ட் ஷேர் யூசர்களுக்கு கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது. 

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான சந்தாதாரர்கள் Netflix தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமான Netflix பயன்பாட்டாளர்கள் இருக்கின்றனர். இந்த தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் பிரபலமான மணி ஹைஸ்ட், வெட்னஸ்டே, ஸ்ரேஞ்சர் திங்ஸ் போன்ற வெப் சீரியஸ்களை பார்ப்பதற்காகவே, நாள்தோறும் இதன் சந்தாதாரர்கள் அதிகரித்து வருகின்றனர். 

இதன் சந்தா வகைகள் மொபைல், பேசிக், ஸ்டாண்டர்ட், பிரீமியம் என மொத்தம் நான்கு பிளான்களில் வருகிறது. இவற்றின் விலை 149,199,499 மற்றும் 649 ஆக இருந்து வருகிறது. இதில் வரும் மொபைல் மற்றும் பேசிக் பிளான்களை ஒரு நேரத்தில் ஒரே சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். அதேசமயம் ஸ்டாண்டர்ட் பிளானை 2 டிவைஸ்களிலும், பிரீமியம் பிளானை 6 டிவைஸ்களிலும் பயன்படுத்தலாம். இருப்பினும், மொபைல் மற்றும் பேசிக் பிளான்களை பயன் படுத்துவோர் அவர்களின் பாஸ்வேர்டைப் பிறருடன் ஷேர் செய்து பயன்படுத்தலாம். இந்த அம்சத்தால் Netflix நிறுவனத்திற்கு சந்தாதாரர்கள் அதிகம் கிடைத்தனர். 

இந்த நிலையில், ஸ்டாண்டர்ட் பிளான் பயன் படுத்துவோர் இனி பாஸ்வேர்ட் ஷேர் செய்ய வேண்டுமென்றால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று புதிய திட்டத்தை நெட்பிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் அமலுக்கு வந்துள்ள நிலையில், விரைவில் இந்தியாவிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவில் தற்போது ஸ்டேண்டர்ட் பிளானின் விலை ரூ.1280 ரூபாயாக உள்ளது. இதுவே இதை பயன்படுத்தும் சந்தாதாரர்கள் பிறருக்கு பாஸ்வேர்ட் ஷேர் செய்தால், கூடுதலாக ரூ.660 செலுத்த வேண்டும். அதேபோல இங்கிலாந்தில் ஸ்டாண்டர்ட் பிளானில் விலை ரூ.980 ஆகும். இவர்கள் தங்களின் பாஸ்வேர்டை ஷேர் செய்தால் கூடுதலாக ரூ.445 செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

இதேபோல பேசிக் மற்றும் மொபைல் பிளான் பயன்படுத்துபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வால் Netflix பயனாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்தியாவில் பெரும்பாலான Netflix பயனாளர்கள் தனது பாஸ்வேர்டை ஷேர் செய்து மட்டுமே வீடியோக்களைப் பார்த்து வருகின்றனர். 

ஒருவேளை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொண்டு வந்தது போல, இந்தியாவிலும் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டால், பல யூசர்கள் Netflix சந்தாவை ரத்து செய்ய வாய்ப்புள்ளது.

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

SCROLL FOR NEXT