செய்திகள்

இங்கிலாந்து நாட்டுக்கு புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்!

கல்கி டெஸ்க்

ங்கிலாந்து நாட்டின் துணை பிரதமர் மற்றும் நீதித்துறை அமைச்சராக இருந்த டொமினிக் ராப் தனது துறை சார்ந்த அதிகாரிகளிடம் மிகவும் மரியாதைக் குறைவாகவும், கொடுமைப்படுத்தும் விதமாகவும் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது சம்பந்தமாக விசாரணை செய்ய பிரதமர் ரிஷி சுனக், மூத்த சட்டத்தரணி ஆடம் டாலி என்பவரை கடந்த நவம்பர் மாதம் நியமனம் செய்தார்.

அந்த விசாரணை அறிக்கையை கடந்த வியாழக்கிழமை அன்று இங்கிலாந்து பிரதமரிடம் ஆடம் டாலி சமர்ப்பித்தார். ஆனால், அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பற்றி எந்தத் தகலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், துணை பிரதமர் டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் புதிய துணை பிரதமராக ஆலிவர் டவுடன் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமன அறிவிப்பிலேயே அலெக்ஸ் சாக் புதிய நீதித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் டொமினிக் ராப், ஏற்கெனவே கூறியபடியே விசாரணைக்கு பிறகு ராஜினாமா செய்துள்ளதாக தனது தரப்பு விளக்கத்தை அளித்து இருக்கிறார்.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், டொமினிக் ராப் மீது தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும், விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்களின் உண்மைத் தன்மையை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT