சீனா மற்றும் அமெரிக்காவில் மீண்டும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாட்டில் தற்போது நிலவும் கொரோனா சூழல் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்தார். அதில் குறிப்பிட்டதாவது:
நாடு முழுவதும் பொது இடங்களில் மீண்டும் மாஸ்க் அணிவதை மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும். மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் அவசியத்தை உணரச் செய்ய வேண்டும்.,மேலும் நாடு முழுவதும் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும் கொரோனா பரிசோதனைகளை விரைவு படுத்த வேண்டும்.
-இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் மீண்டும் முககவசம் அணிய வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.