செய்திகள்

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி!

கல்கி டெஸ்க்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘மோடி’ பெயர் குறித்துத் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி இருந்தது. அதோடு, மேல்முறையீடு செய்யவும் அவருக்கு அவகாசம் கொடுத்து அந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை அடுத்து ராகுல் காந்தி தனது எம்.பி. பதவி தொடர்பாக மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்.

எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குற்ற வழக்குகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் அவர்களது பதவியைப் பறிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இடம் உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
1951ல் பிரிவு 8 (3)ன்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்றும் வகுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி மற்றும் வயநாடு தொகுதி எம்பி. பதவியையும் பறித்து மக்களவை செயலகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

அந்தப் படத்தில் ரஜினியுடன் நடித்திருக்க கூடாது! – குஷ்பு வருத்தம்!

எலான் மஸ்க் தொழில்நுட்பத்திற்கு பச்சைக்கொடி… அடேங்கப்பா! 

SCROLL FOR NEXT