Editor 1
செய்திகள்

ரயில்வே துறையில் 2.74 லட்சம் காலிபணியிடங்களா?வெளியான அதிர்ச்சி தகவல்!

கல்கி

யில்வே துறையில் இரண்டரை லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் குறித்து மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ரயில்வே அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதற்கு பதிலளித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில்வே ஜூன் மாத நிலவரப்படி 2.74 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், பாதுகாப்பு பிரிவில் மட்டுமே 1.70 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், தற்போது இந்த காலிப்பணியிடங்கள் குறித்து ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 2.74 காலிப்பணியிடங்களில் 1.52 லட்சம் காலிப்பணியிடங்கள் அக்டோபர் மாதத்திற்குள் நிரப்பப்பட இருப்பதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி குரூப் சி பிரிவில் பாதுகாப்பு பிரிவில் மட்டுமே 9.82 லட்சம் காலிப்பணியிடங்களில் 8.04 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே 1.38 லட்சம் பேருக்கு பணி நியமன ஆணைக்கான கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பணி நியமன ஆணை பெற்ற 90 ஆயிரம் ஊழியர்கள் தற்போது ரயில்வே பணியில் சேர்ந்துள்ளதாகவும், தற்போது பணியில் சேர்ந்த 90% பணியாளர்களும் பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்கள் எனவும் ரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரயில்வே துறையில், சுமார் 3 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக துறை சார்ந்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

SCROLL FOR NEXT