RBI Intel
செய்திகள்

மூடப்பட்டது யுனைடெட் இந்தியா கூட்டுறவு வங்கி.!

விஜி

இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை உத்தர பிரதேச மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட யுனைடெட் இந்தியா கோ-ஆப்ரேடிவ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் இருக்கும் கூட்டுறவு வங்கிகளின் நிதிநிலையை ஆய்வு செய்து வரும் வேளையில் அடுத்தடுத்து பல வங்கிகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் (Bijnor) சேர்ந்த யுனைடெட் இந்தியா கூட்டுறவு வங்கியில் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் ஆர்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால் வங்கி இனி எவ்விதமான வணிகத்தையும் மேற்கொள்ள முடியாது. ஆர்பிஐ இந்த முக்கியமான அறிவிப்பை புதன்கிழமை மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

யுனைடெட் இந்தியா கோ-ஆப்ரேடிவ் வங்கி மூடப்படும் நிலையில் இவ்வங்கியின் ​​ஒவ்வொரு டெபாசிட்தாரர்களுக்கும் வழக்கம் போல் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) அமைப்பிடம் இருந்து அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட் தொகைக்கு காப்பீடு கிடைக்கும்.

இதன் மூலம் இவ்வங்கியில் டெபாசிட் செய்த 99.98 சதவீத வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய முழு டெபாசிட் தொகையையும் DICGC அமைப்பிடம் இருந்து இன்சூரன்ஸ் பாதுகாப்பு வாயிலாக பெற்றுள்ளனர் என்றும் ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் ஆர்பிஐ யுனைடெட் இந்தியா கூட்டுறவு வங்கியில் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வங்கி உரிமத்தை ரத்து செய்ததாக கூறியதோடு, தற்போதைய நிதி நிலையில் இவ்வங்கி அதன் டெபாசிட்தாரர்களுக்கு முழுமையாக பணம் செலுத்த முடியாத நிலையில் தான் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியது.

மேலும் இவ்வங்கி தொடர்ந்து இயங்குவதன் மூலம் டெபாசிட் வாடிக்கையாளர் நலன் பாதிப்பு ஏற்பட்டு தீங்கு விளைவிக்கும் என ஆர்பிஐ தனது அறிக்கையில் விளக்கம் கொடுத்துள்ளது. இவ்வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதால், இவ்வங்கி வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் திருப்பிச் செலுத்துவது உட்பட அனைத்து வங்கி சேவைக்கும் தடை விதித்துள்ளது.

"பயிற்சி செய் அல்லது செத்து மடி": ப்ரூஸ் லீயின் அறிவுரை!

Spider Man கதாபாத்திரத்தின் தலைசிறந்த 10 ஊக்கமூட்டும் பொன்மொழிகள்! 

Direct-to-Cell செயற்கைக்கோள் இணைப்பு: புதிய யுகத்தின் தொடக்கம்! 

உங்கள் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கிறதா? அப்படியென்றால் இதுபோன்ற செடிகளை வளர்க்காதீர்கள்!

திருக்கண்ணபுரம் முனையதரையன் பொங்கல் பிரசாதம் உருவான வரலாறு!

SCROLL FOR NEXT