செய்திகள்

இபிஎஸ் அணியில் சரவணன்

கல்கி டெஸ்க்

மதுரையை சேர்ந்தவர் டாக்டர் சரவணன். முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். அதன்பின் தி.மு.க. விலிருந்து விலகி பா.ஜ.க.வில்  இணைந்தார். தற்போது பா.ஜ.க.விலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார் டாக்டர் சரவணன்.

முன்னதாக 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்காததை அடுத்து தி.மு.க.விலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். தேர்தலில் போடியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. போட்டி இட்டு தோல்வி அடைந்தார்.

அவரது செயல்பாடுகள் திருப்தி இல்லாத காரணத்தால் பா.ஜ.க. வினர் டாக்டர் சரவணனை ஓரங்கட்டினர்.

சில மாதங்களுக்கு முன்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பழனிவேல் தியாகராஜன் இல்லத்திற்கு அன்றைய தினமே சென்ற மருத்துவர் சரவணன் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவர் பாஜகவிலிருந்து விலகினார்.

பாஜகவிலிருந்து விலகிய பின்னர் மீண்டும் அவர் திமுகவில் இணைவார் என கூறப்பட்டது. அதற்காக அவர் பலவழிகளிலும் முயன்றதாகவும் அதற்கு மதுரை திமுக முக்கிய நிர்வாகிகள் முட்டுகட்டை போட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனால் அ.தி.மு.க.வில் இணைய முடிவெடுத்தார். அ.தி.மு.க.வில் எந்த அணியில் இணைவது என்ற குழப்பத்தில் இருந்தார். ஓபிஎஸ் அணியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளதா என்றும் யூகங்கள் கிளம்பின.

இந்தச் சூழலில் அவர் எடப்பாடி பழனிசாமி அணியில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

70 வயதுக்குப் பிறகும் அறிவாற்றல், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது எப்படி?

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

SCROLL FOR NEXT