செய்திகள்

கோவையிலிருந்து காஷ்மீர் வரை சிறப்பு சுற்றுலா ரயில்!

கல்கி டெஸ்க்

கோடை விடுமுறை நெருங்கி வருகிறது. இந்த விடுமுறையில் கோடை வெய்யிலிலிருந்து தப்பித்துக் கொள்ளவும், தங்கள் குடும்பத்தாருடன் வருடத்துக்கு ஒருமுறை இனிதாக பொழுது போக்கவும் பெரும்பாலானவர்கள் திட்டமிட்டு இருப்பார்கள். அது போன்றவர்களுக்கு இனிப்பான செய்தி ஒன்றினை இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியன் ரயில்வே சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து பல்வேறு வகையான புதுப்புது கோடைக்கால சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த வருடம், ’பாரத் கௌரவ்’ திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரிலிருந்து காஷ்மீர் வரை செல்லும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட சிறப்பு சுற்றுலா ரயில்களை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு ரயில் வருகின்ற மே மாதம் 11ம் தேதி கோவையிலிருந்து காஷ்மீருக்குப் புறப்பட உள்ளது.

இந்த சிறப்பு சுற்றுலா ரயில் குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் இயங்கும் இந்த சவுத் ஸ்டார் ரயில் வரும் மே 11ம் தேதி சிறப்பு சுற்றுலாவாக ஸ்ரீநகர், சோனமார்க், குல்மார்க், ஆக்ரா, அமிர்தசரஸ் போன்ற சுற்றுலா தலங்களுக்கு பன்னிரண்டு நாட்கள் சிறப்பு சுற்றுலாவாக கோவையிலிருந்து புறப்படுகிறது. சுற்றுலா பயணிகள் செல்லும் ஊர்களில் உள்ள தங்கும் விடுதிகளுக்குச் செல்லும்போது அவரவர்கள் அன்றைக்குத் தேவையான உடமைகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். மீதி உடமைகள் ரயிலிலேயே பாதுகாக்கப்படும் வசதி உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர்.

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

SCROLL FOR NEXT