செய்திகள்

நீட் தேர்வில் சாதித்திருக்கும் தமிழக மாணவர்கள்!

கல்கி டெஸ்க்

ளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதித் தேர்வான நீட் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு இருக்கின்றன. இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720 மதிப்பெண்கள் (99.9999019 விழுக்காடு) பெற்று தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்று இருக்கிறார்.

அதைப் போன்றே, தமிழகத்தைச் சேர்ந்த கவுஸ்டவ் பவுரி என்ற மாணவர் 716 மதிப்பெண்கள் (99.9998528 விழுக்காடு) பெற்று தரவரிசைப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்று இருக்கிறார். மேலும், சூர்யா சித்தார்த் என்ற மாணவர் 715 (99.999068 விழுக்காடு மதிப்பெண்கள்) பெற்று தரவரிசைப் பட்டியலில் 6வது இடத்தைப் பெற்று இருக்கிறார். இவை தவிர, முதல் பத்து இடங்களில் தமிழகத்தில் இருந்து மட்டும் மொத்தம் நான்கு பேர் இடம் பெற்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக, தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் 1,47,583 மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 78,693 மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இந்த ஆண்டின் ஒட்டுமொத்த தேர்ச்சி 53.3 சதவிகிதம் ஆகும். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் (51.2%) இந்த எண்ணிக்கை அதிகமானது ஆகும். மேலும், இந்த ஆண்டு, தமிழ் மொழியில் நீட் தேர்வை எழுத 30,536 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நகங்களை வலிமையாக வைத்துக்கொள்ள சில டிப்ஸ்!

திருமாலுக்கும், பிரம்மனுக்கும் பாடம் புகட்டிய சிவபெருமான்!

தனிமையில் வாழும் ஹெர்ட்ஸ் திமிங்கலங்கள்… என்ன காரணம்?

ஐந்து நிலை கோபுரங்களை கொண்ட கந்தகோட்டம் கந்தசாமி கோவில்!

குழு பயணம் அல்லது தனிப் பயணம் எது சிறந்தது!

SCROLL FOR NEXT