சூப்பர் மூன் Intel
செய்திகள்

இன்று இரவு வானில் நிகழும் அதிசயம்.. நீல நிறத்தில் சூப்பர் மூன்.. மிஸ் பண்ணிடாதீங்க!

விஜி

கஸ்ட் 1-ம் தேதியான இன்று நிலவு பூமிக்கு மிக அருகில் வரும், இதன் காரணமாக வானத்தில் மிகப்பெரிய சூப்பர் மூன் தோன்றவுள்ளது.

நிலவு அதன் சுற்றுப்பாதையில், பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதேநேரத்தில் முழுநிலவாக இருக்கும் போது சூப்பர் மூன் தோன்றுகிறது. நீள்வட்டப்பாதையின் மிக தொலைதூர புள்ளி என்பது அப்போஜீ (apogee) என்று அழைக்கப்படும். மிக அருகில் உள்ள புள்ளி பெரிஜீ (perigee) என்று அழைக்கப்படுகிறது.

எனவே, முழு நிலவானது பூமிக்கு மிக அருகில் உள்ள பெரிஜீ புள்ளியில் தோன்றும் போது சற்று பிரகாசமாகவும் வழக்கமான முழு நிலவை விட பெரிதாகவும் தோற்றமளிக்கும். இதைத்தான் சூப்பர்மூன் அதாவது பெருநிலவு என்று அழைக்கிறோம்.

ஓராண்டில் மூன்று அல்லது நான்கு முறை சூப்பர்மூன் தோற்றமளிக்கும். சூப்பர்மூனை பார்வையின் மூலம் வேறுபடுத்தி பார்ப்பது கடினமானது. ஆனால், அது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். நிலவு பூமிக்கும் மிக அருகில் வரும் போது வழக்கத்தை விட அதிகமான கடல் அலைகள் ஏற்படும்.

இந்த ஆண்டின் 2வது சூப்பர் மூன் ஆகஸ்ட் 1-ம் தேதியான இன்று இரவு தெரியும், ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை பெளர்ணமி வரும். ஆகஸ்ட் முதல் தேதியும், ஆகஸ்ட் 30ம் தேதி என ஆகஸ்ட் மாதத்தில் இரு முறை பெளர்ணமி வருகிறது. இது போன்ற நிகழ்வு 2037ம் ஆண்டு தான் மீண்டும் வரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நாளில் தெரியும் சூப்பர் மூன் ஸ்டர்ஜன் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. இது மற்ற சூப்பர் மூன்களை விட மிகப் பெரியதாக இருக்கும், ஏனெனில் அது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இது தவிர, அதன் நிறத்தை நீங்கள் எளிதாகப் பார்க்க முடியும். இந்த நாளில் பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை சுமார் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தவறுகளை ஒப்புக்கொள்வது உங்களை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்செல்லும்!

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

SCROLL FOR NEXT