செய்திகள்

வாவ் செய்தி: ஒரு மாம்பழம் அளவுக்கு மிகப்பெரிய முட்டையிட்ட அதிசயக் கோழி! எங்கு தெரியுமா?

கார்த்திகா வாசுதேவன்

கனடிய மாகாணங்களில் ஒன்றான மனிடோபாவில் விவசாயப் பண்ணைகளும், கோழிப்பண்ணைகளும் நிறைந்துள்ளன. அங்கிருக்கும் பண்ணையாளர்களில் ஒருவரான ஆஷா பார்டெல்லுக்கு கடந்த வியாழன் அன்று ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஓக்பேங்கின் தென்கிழக்கே அமைந்திருந்த பார்டெல்லின் பண்ணைத் தோட்டத்தில் ஹென்ரிட்டா எனும் பெயரில் இரண்டே வயது நிரம்பிய கோழி ஒன்றிருக்கிறது. அதற்கு அப்போது முட்டையிடும் பருவம்.

“இன்றோ, நாளையோ முட்டையிட்டு விடும் என்று காத்திருக்கையில் திடீரென அதனிடமிருந்து வியாழன் காலையில் தீனமான அலறல் சத்தம் கேட்டது. நான் நெருங்கிச் சென்று அதைப் பார்ப்பதற்குள் ராட்சத முட்டையொன்று தரையில் கிடப்பதைக் கண்டேன். அதைக் கண்டதும் என்னுடைய முதல் எண்ணம் என்னவென்றால், ஓ கடவுளே இது எவ்வளவு பெரிய முட்டை! பாவம் என் கோழி!” என்றே என் கோழியை நினைத்து மலைத்துப் போய் ஒரு கணம் வருத்தப்பட்டேன்.- என்கிறார் பார்டெல். ஏனெனில், அவர் அதுவரை அவ்வளவு பெரிய முட்டையைப் பார்த்ததில்லை.

காரணம், சாதாரணமாக ஒரு கோழிமுட்டை 50 கிராம் முதல் 70 கிராம் வரை எடையுடன் இருந்தால் அது நார்மல். ஆனால், இந்தக்கோழி இட்ட முட்டையின் எடை எவ்வளவு தெரியுமா? 202 கிராம். சராசரியாக நாம் பெரிய முட்டைகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அளவைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிக எடை கொண்டுள்ளது.

சாதாரணமாகவே ஹென்ரிட்டாவின் முட்டைகள் 75 கிராம் எடையுடன் சற்றுப்பெரியதாவே இருக்கும். ஆனால், இம்முறை 7 பவுண்டுகள் எடை கொண்ட அந்த மெல்லிய லாவண்டர் நிறப்பறவை இட்ட முட்டையானது என் உள்ளங்கையில் அடக்கத்தக்க அளவிலான சிறிய மாம்பழத்தின் அளவில் இருந்ததை என்னால் நம்பவே முடியாமல் நான் பார்த்துக் கொண்டிருந்தேன் - என்கிறார் பார்டெல்.

தொழில்துறை சங்கமான மனிடோபா முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் கிளாரி மெக்காஃப்ரி, அந்தப் பெரிய முட்டையைக் கண்டு தனக்கும் கூட மிகவும் ஆச்சரியமாக இருந்தது என்கிறார். கனடாவில் சமீபத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இதே விதமாக மிகப்பெரிய முட்டைகளைக் காண முடிந்தது. ஆனால், அவைகளும் கூட எடையை வைத்துப் பார்க்கும் போது ஹென்ரிட்டாவின் முட்டையைக் காட்டிலும் சிறியனவே! - என்றார் கிளாரி.

கனடாவின் லீமிங்டன், ஓன்ட் விவசாயப் பண்ணைகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த ராட்சத முட்டையின் மர்மத்தை உடைத்தனர் எக்கோ பே, ஓன்ட் இல் வளர்க்கப்படும் கோழிகள் எப்போதாவது அதிசயமாக 180 கிராம் எடையுள்ள முட்டைகளை இடுவது வழக்கம்.இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஓன்ட், லீமிங்டனில் உள்ள விவசாயிகள், 175 கிராம் எடையுள்ள, ஆரஞ்சுப் பழத்தின் அளவுள்ளதொரு முட்டையைக் கண்டுபிடித்தனர்.

அதே போல 2017 ஆம் ஆண்டு ஓன்ட், எக்கோ பேயில் இடப்பட்ட மற்றொரு முட்டையானது 180 கிராம் எடை கொண்டதாக இருந்தது. இந்த வரிசையில், உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டையென கின்னஸ் சாதனை படைத்த முட்டையென்றால் அது 1956 ஆம் ஆண்டில் நியூஜெர்ஸியில் இடப்பட்ட 454 கிராம் கோழி முட்டையே!

ஒரு முட்டையின் அளவு பொதுவாக கோழியின் வயதைப் பொறுத்தது என்கிறார் மெக்காஃப்ரி.பெரிய முட்டைகள், ஒன்றுக்கு பதிலாக இரண்டு மஞ்சள் கருவைக் கொண்டிருக்கும், பொதுவாக கோழியின் இனப்பெருக்க வாழ்க்கையின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ, கோழி நிறைய ஹார்மோன் மாற்றங்களைச் சந்திக்கும் போது இப்படிப்பட்ட முட்டைகளை இடும் என்கிறார் அவர்.

ஹென்றிட்டா இட்ட முட்டையில் இரண்டு மஞ்சள் கருக்கள் இருந்தன - ஒன்று முதல் ஓட்டின் உள்ளேயும் மற்றொன்று முதல் ஓட்டுக்குள் ஒரு தனி முட்டையின் உள்ளேயும் இருந்தது. இதில் முதலில் முட்டை சரியாக உருவாகவில்லை, ஆனால் அதன் மீது ஒரு ஷெல் இருந்திருக்கலாம், ஆகவே பின்னர் அதைச்சுற்றி மற்றொரு முட்டை உருவாகத் தொடங்கி இருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் மெக்காஃப்ரி கூறுகிறார்.

அவரது கூற்றின் படி உள்ளிருக்கும் முட்டையானது அளவில் மிகப்பெரிதாக இருக்க வாய்ப்பு இல்லை. அது மற்ற சாதாரண முட்டைகளைப் போலத்தான் இருக்கும். இவ்வளவு பெரிய முட்டையை இட்டதால் வியாழன் அன்று ஹென்ரிட்டா சற்று வலியுடன் தோன்றினாலும், மறுநாள் தனது வழக்கமான நிலைக்குத் திரும்பியதாக பார்டெல் கூறினார்.

இந்த சாதனை முட்டையை என்ன செய்வதாக இருக்கிறீர்கள் எனும் கேள்விக்கு பார்டெல் அளித்த பதில்; நான் இதை உணவாக மாற்றலாம் என்றிருக்கிறேன். ஏனெனில் குஞ்சுகளை அடைகாக்க முயற்சித்தால் அவை உயிர்வாழ வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை, எனவே எக் ஸ்கிராம்பிள் செய்து சாப்பிட்டு விடலாம் என்கிறார்.

இனி சிறுகோள்களில் உணவு உற்பத்தி செய்யலாம்!

உங்கள் தன்னடக்கத்தை மேம்படுத்தும் 5 வழிகள்!

வேற்று கிரக வாசிகளால் செய்யப்பட்ட சிலையா? எந்தக் கோவிலில் உள்ளது தெரியுமா?

தொடர் ஏப்பத்துக்கான காரணமும் இயற்கை வழி தீர்வும்!

ஹீரோயினுக்காக கழிவறை கழுவிய இயக்குநர்… யாருப்பா அவர்?

SCROLL FOR NEXT