செய்திகள்

தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு: முதலமைச்சர் அறிவிப்பு!

கல்கி டெஸ்க்

மிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் சென்ற வெள்ளிக்கிழமையோடு முடிந்தது. இதில் கடைசி நாளன்று, எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், தனியார் நிறுவங்களில்  8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதா குரல் வக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட ஆளும் கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவைத் திரும்பப்பெற வலியுறுத்தி வெளிநடப்பு செய்தன.

அதைத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் மற்றும் சங்கங்களின் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் பல்வேறு துறைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிற்சங்கங்களும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் சாராம்சம்  குறித்து அமைச்சர்கள் குழு முதலமைச்சரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ’தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்திவைப்பதாக’ முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ’’திமுக எப்போதுமே தொழிலாளர்களின் தோழனாகவே செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெரும் முதலீடுகளை ஈர்க்கவும், வேலை வாய்ப்பை உருவாக்கவும் மட்டுமே சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் துறையில் அமைதி நிலவும் என்பதை திமுக அரசு உணர்ந்து செயல்பட்டு வந்துள்ளது. தற்போதும் அதே சிந்தனையுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது’’ எனவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.

’12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைக்கப்படுகிறது’ என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் வரவேற்பு தெரிவித்து இருக்கின்றன.

என்னை துறந்து சென்றவனும் என்னால் துறக்கப்பட்டவனும்!

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் சமையல் எண்ணெய்கள்!

இந்த ரகசியம் மட்டும் தெரிஞ்சா இனி குளிர்ந்த நீரில்தான் குளிப்பீங்க! 

கார்த்திகை மாதத்தில் வீட்டு வாசலில் இரண்டு விளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா?

இளம் வயதினரைத் தாக்கும் புற்று நோய்கள் என்னென்ன தெரியுமா? 

SCROLL FOR NEXT