ஓபிஎஸ்  
செய்திகள்

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழக அரசு வலுவான வாதங்களை வைக்க வேண்டும்! ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

கல்கி டெஸ்க்

ஜல்லிக்கட்டு போராட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆட்சியில் இருந்தபோது மெரினாவில் விஸ்வரூபம் எடுத்தது அனைவரும் அறிந்ததே. மொத்த தமிழகமே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் .

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கின் முடிவு தமிழ்நாட்டிற்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பான அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், 2017ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமையும், பாரம்பரியமும், கலாச்சாரமும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது .

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

SCROLL FOR NEXT