செய்திகள்

30 நிமிடத்தில் நடந்த மேஜிக்.. கார் டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9000 கோடி டெபாசிட்!

விஜி

மிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தவறுதலாக கேப் ஓட்டுநர் ஒருவருக்கு ரூ.9000 கோடி செலுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கார் ஓட்நர் ராஜ்குமாரின் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த 9ஆம் தேதி திடீரென அவரது வங்கிக் கணக்கில் 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் ஆனதாக செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் பல ஜீரோக்கள் இருந்ததால், தனது வங்கி கணக்கில் 15 ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், இது மோசடி வேலையாக இருக்குமோ? என்ற சந்தேகத்தில் தனது நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார். அது அவரது வங்கி கணக்கில் இருந்து டெபிட் ஆகியுள்ளது. இதனால் வங்கிக் கணக்கில் பணம் உள்ளது உண்மைதான் என உறுதி செய்து கொண்ட ராஜ்குமார், மேலும் பணத்தை நண்பருக்கு அனுப்ப முயன்றுள்ளார். அதற்குள் தவறை கண்டுபிடித்து சுதாரித்துக்கொண்ட தனியார் வங்கி, உடனடியாக பணத்தை திருப்பி எடுத்துக் கொண்டது.

அதன்பின், தங்களை தொடர்பு கொள்ளவேண்டும் என்று வங்கியில் இருந்து பேசிய அதிகாரிகள், பின்னர் மிரட்டும் தோனியில் பேசியதாக தெரிகிறது. அதன்பின், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு அழைத்து சென்று வழக்கறிஞர் முன்னிலையில், தவறுதலாக உங்கள் வங்கி கணக்கில் பணத்தை வரவு வைத்துவிட்டோம். நீங்கள் செலவு செய்துள்ள பணத்தை திருப்பி தரவேண்டாம். அதற்காக வாகன கடனாக பெற்றுக்கொள்ளலாம் என சமரசம் பேசியுள்ளனர். இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வோம் என்று வங்கி கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வெளிநாட்டிலோ அல்லது நாட்டின் வேறு எங்கே நடப்பதாக கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில், 30 நிமிடம் மட்டும் ஒருவர் கோடீஸ்வரரான கதை சென்னையிலேயே நடந்திருப்பது மக்களிடத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. அதேசமயம் இதுபோல் தவறுதலாக ஒருவருடைய வங்கி கணக்கில் பணம் வந்தாலோ அல்லது கடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டால் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளையில் பயணாளர்கள் தெரிவிக்கவேண்டும் என வங்கி மற்றும் காவல் துறையினர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்வ செழிப்பு தரும் சில எளிய வாஸ்து குறிப்புகள்!

நேரம் எனும் நில்லாப் பயணி!

ஸ்வஸ்திக் வடிவ கிணறு பற்றி தெரியுமா உங்களுக்கு?

சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!

World Family Doctor Day: கொண்டாடப்பட வேண்டிய ஹீரோக்கள்! 

SCROLL FOR NEXT