Thailand's new PM Paetongtarn Shinawatra 
செய்திகள்

தாய்லாந்தின் பிரதமரான கோடீஸ்வரி!

ராஜமருதவேல்

தாய்லாந்து மன்னராட்சி நடைபெறும் ஒரு நாடாகும். கடந்த ஆண்டு தாய்லாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரேத்தா தவிசின் அரசியல் சாசனத்தை மீறி செயல்பட்டதாக கூறி அந்நாட்டு நீதிமன்றத்தால் அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பின் தாய்லாந்தின் புதிய பிரதமராக  37 வயதான பேடோங்டர்ன் ஷினவத்ரா, ஆளும் கட்சி எம்பிக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் தான் பேடோங்டர்ன் ஷினவத்ரா. தாய்லாந்து நாட்டின் இரண்டாவது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறுகிறார். இவரது அத்தை யிங்லங் ஷினவத்ரா அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி வகித்திருந்தார். இதன் மூலம் ஷினவத்ரா குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு  தாய்லாந்தில்  தொடர்கிறது. 

பேடோங்டர்ன் ஷினவத்ராவின் பின்னணி:

பேடோங்டர்ன் ஷினவத்ராவின் தந்தையான தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து நாட்டின் பெரும் தொழிலதிபராக இருந்தார். தாய்லாந்து அரசியலில் இறங்கிய அவர் வெற்றி பெற்று 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றார். பிரிவினைவாத அரசியல்வாதியாக செயல்பட்ட அவரின் ஆட்சியை 2006 ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்தது. நாட்டில் இருந்து தக்சின் வெளியேற்றப்பட்டார். வெளிநாட்டில் இருந்து அவர் தொடங்கிய புதிய கட்சி மீண்டும் 2011 இல் தாய்லாந்தில் ஆட்சியை பிடித்தது. தக்சினின் சகோதரியான யிங்லங் ஷினவத்ரா தாய்லாந்தின் முதல் பெண் பிரதமரானார். 2014 ஆம் ஆண்டு யிங்லங் ஆட்சியை தாய்லாந்து ராணுவம்  புரட்சியின் மூலம் கவிழ்த்தது.

பாங்காக்கில் பிறந்த பேடோங்டர்ன், சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தில்  அரசியல், அறிவியல், சமூகவியல் மற்றும் மானுடவியல் ஆகியவற்றில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார். பின்னர் இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஹோட்டல் மேலாண்மையில் முதுகலைப் பட்டமும் பெற்றார். SC அசெட் கார்ப்பரேஷனின் முதன்மைப் பங்குதாரராகவும், தாய்காம் அறக்கட்டளையின் இயக்குநராகவும் உள்ள அவர் தாய்லாந்தின் பெரும் கோடீஸ்வரியாகவும் உள்ளார்.

2022 இல் அரசியலில் நுழைந்த பேடங்டர்ன் பியூ தாய் கட்சியின் தலைவராகி முன்னணி பிரதமர் வேட்பாளராகவும் மாறினார். ஆயினும் தேர்தலில் அவருக்கு இரண்டாம் இடமே கிடைத்தது. பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவி நீக்கத்தை தொடர்ந்து தற்போது புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாய்லாந்து மன்னர் மஹா வஜிலாங்கோர்னின் ஒப்புதலை அடுத்து பாரம்பரிய முறைப்படி தாய்லாந்து அரசரின் புகைப்படத்தின் கீழ் மண்டியிட்டு வணங்கி பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். நாடு முன்னேற வேண்டும் , பொருளாதார சிக்கல்கள் தீர்க்கப்படும்  என்று பேடோங்டார்ன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் உலகத் தலைவர்களும் பேடங்டர்னுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மூச்சரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

காமதேனு சிலையை வீட்டில் எங்கு வைப்பது நல்லது தெரியுமா? 

யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனை… கைது செய்த வனத்துறையினர்!

சுவையான சேனைக்கிழங்கு மசாலா-உருளைக்கிழங்கு பொரியல் செய்யலாமா?

மனிதர்களுக்கு அவசியம் தேவையான 7 வகை ஓய்வு பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT