செய்திகள்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

கல்கி

தமிழகத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாக பிப்ரவரி 1 லிருந்து 20ம் தேதிவரை நடத்தப்படும் என்று, கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சற்றுமுன்பு அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்ததாவது;

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான முறையில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படும்.பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும். கல்லூரி

இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி முறையில் தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு பிறகு நடத்தப்படும். பிப்ரவரி 20-ம் தேதிக்கு பிறகு நோய்த்தொற்று பரவலின் சூழலைப் பொறுத்து நேரடி வகுப்புகள் குறித்து முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT