செய்திகள்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருகிறது - இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கருத்து!

கல்கி டெஸ்க்

பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கருத்து தெரிவித்து உள்ளார்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டதில் 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது என்கிறார் ரணில் விக்கிரமசிங்கே. இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இதனால் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. அந்நாட்டு அதிபராக ரணில் விக்கிரம சிங்கே பதவி ஏற்றார். இதையடுத்து அவர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் பொருளாதாரத்தில் மீட்சி அடைந்து வருவதாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்து வருகிறார்.

இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியதாவது :- எங்களது கொள்கையில் தீர்மானமாக செயலாற்றியதன் பலனாக இன்று இலங்கையில் பணவீக்கம் குறைந்து வருகிறது. 70 சதவீதம் வரை உயர்ந்து இருந்த நாட்டின் பணவீக்கம் தற்போது 25.2 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைந்து உள்ளது.

இதனால் ஒட்டு மொத்த சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மீண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி னார். இந்த நிலையில் இலங்கையின் மத்திய வங்கி கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக வட்டி விகிதத்தினை குறைப்பதாக அறிவித்து இருக்கிறது. இது இலங்கையில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வருவதற்கான முதல் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT