செய்திகள்

அதிகாலை 2.30 மணிக்கு வந்த இமெயில். அதிர்ந்துபோன ட்விட்டர் ஊழியர்கள்.

கிரி கணபதி

ரு மனுஷன் வேலை செய்யலாம் ஆனா இப்படி வேலை செய்யக்கூடாது. அதிகாலை 2:30 மணிக்கு ட்விட்டர் நிறுவன ஊழியர்களுக்கு "Office Is Not Optional" என எலான் மஸ்க் இமெயில் அனுப்பிய தகவல் வெளிவந்துள்ளது. 

எலான் மஸ்க் அசாதாரண செயல்களை செய்வது சாதாரணமான ஒன்றுதான். இதில் தனது ஊழியர்களுக்கு நள்ளிரவில் மின்னஞ்சல் அனுப்பிய செய்தி அசாதாரணமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல் பல முறை ட்விட்டர் நிறுவனம் தொடர்பான முக்கிய தகவல்களை இரவு நேரத்தில் அடிக்கடி பகிர்ந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 

சமீபத்தில் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்களில் ஒன்று, பாதி காலியாக இருப்பதை கவனித்த எலான் மஸ்க், "Office Is Not Optional" என இமெயில் அனுப்பியுள்ளார். அதாவது" அலுவலகத்திற்கு வரலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பது உங்கள் விருப்பமில்லை" என்பதை நினைவூட்டியுள்ளார். இதை அவர் அதிகாலை 2:30 மணிக்கு சான் பிரான்சிஸ்கோ வாயிலாக ட்விட்டர் பணியாளர்களுக்கு அனுப்பியதுதான், விசித்திரமாகப் பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க், தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றதிலிருந்தே ட்விட்டர் நிறுவனத்தில் பல தீவிர மாற்றங்களை செய்துவருகிறார். ஏற்கனவே 7500 பணியாளர்களுடன் இயங்கி வந்த ட்விட்டர் நிறுவனத்தில், தற்போது 2000 நபர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். இந்த அதிரடி ஆட்குறைப்பு மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.தொடக்கம் முதலே ட்விட்டர் நிறுவனத்தில் பணி நீக்க நடவடிக்கைகளை அவர் தீவிரமாக செய்து வருகிறார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதன் முந்தைய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் சில மூத்த நிர்வாகிகளை பணி நீக்கம் செய்து அதிசயிக்க வைத்தார். 

ட்விட்டர் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க ஒரே நேரத்தில் 3700 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த நடவடிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கி தற்போது வரை தொடர்கிறது எனலாம். இதில் மற்றொரு ஆச்சரியமான நடவடிக்கை என்னவென்றால், 2023 பிப்ரவரி மாதத்தில் கூட கிட்டத்தட்ட 200 பேரை பணி நீக்கம் செய்தார். இதில் அதிகமாக தயாரிப்பு மேலாளர்கள், பொறியாளர்கள், தரவு விஞ்ஞானிகள் போன்ற பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

தொடக்கத்தில் மானிட்டைசேஷன் உட்கட்டமைப்பு குழுவில் இருந்த 30 பேர் தற்போது 8 பேராக குறைக்கப்பட்டுள்ளார்கள். எலான் மஸ்க் ட்விட்டர் 2.0 உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த ட்விட்டர் ப்ளூவின் தலைவர் கூட இதில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் எடுத்துள்ள இந்த அதிரடி பணி நீக்க நடவடிக்கைகள் ட்விட்டர் நிறுவனத்தை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லப் போகிறது எனத் தெரியவில்லை. 

பல நிபுணர்களும் Twitter நிறுவனம் மூழ்கிவிடும் என்று கருத்து தெரிவித்து வரும் நிலையில், எலான் மஸ்க் அவர்கள்,  இவ்வாறான தைரியமான பல நடவடிக்கைகள் எடுத்து வருவது, அவரை ஒருபுறம் வியப்பாகவும் பார்க்க வைக்கிறது.

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

டைப் A மற்றும் டைப் B இரண்டும் கலந்த ஆளுமைத்தன்மை உள்ளவர்களின் சிறப்பியல்புகள்!

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

SCROLL FOR NEXT