செய்திகள்

உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அதிகரிப்பு, ஆய்வுகள் சொல்லும் செய்திகள் என்ன? தமிழ்நாடு டாப் 10ல் இருக்கிறதா?

ஜெ. ராம்கி

மத்திய அரசின் கல்வி அமைச்சகம், உயர்கல்வித்துறையின் நடைபெறும் சேர்க்கைகள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. AISHE என்னும் அனைத்து இந்திய உயர்கல்விக்கான ஆய்வுகளை செய்யும் அமைப்பு, ஆண்டுதோறும் ஆய்வுகளை நடத்தி வருகிறது.

கடந்த 2020 - 2021 ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. நாடு முழுவதும் உயர்கல்வியில் சேர்பவர்களின் எண்ணிக்கை 7.5 சதவீதம் உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது.

2020 - 2021 ஆண்டில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 4.13 கோடியாக உயர்ந்திருக்கிறது. இது கொரானா பரவலுக்கு முந்தைய காலத்தை விட அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தொலைதூரக்கல்வி வாயிலாக உயர் கல்வி படிப்புகளில் சேருபவர்களின் விகிதம் 7 சதவீதம் உயர்ந்திருக்கிறது.

ஏறக்குறைய ஐந்து லட்சத்திற்கும் அதிகமான பட்டியிலினத்தைச் சேர்ந்தவர்களும், ஆறு லட்சத்திற்கும் மேலான பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் கூடுதலாக இணைந்திருக்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களைப் பொறுத்தவரையில் 2014 ஆண்டைவிட 2021ல் கூடுதலாக 36 லட்சம் பேர் உயர்கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள். இது உண்மையில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். குறிப்பாக பெண்கள் உயர்கல்விக்கு செல்வது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.

அதே நேரத்தில் பட்டியலினத்தை சேர்ந்தவர்களில் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கை முன்பை விட சிறிதளவு குறைந்துள்ளது. சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் உயர்கல்விக்கு செல்வதும் சிறிதளவு குறைந்திருக்கிறது. 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் குறைந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. அதே போல் உடன் ஊனமுற்றோர்களில் உயர்கல்வி படிப்பு சேருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்திருக்கிறது.

இத்தகைய ஆய்வுகளில் GER ( Gross enrolment ratio) அதாவது உயர் கல்வியில் மாணவர் சேர்க்க குறியீடு முக்கியமான விஷயம். அதில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து டாப் 3ல் இருந்து வருகிறது. முதலிடத்தை சிக்கிம், 2-ம் இடத்தை சண்டிகர் ஆகிய மாநிலங்கள் பெற்றுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.

தமிழ்நாட்டின் GER, ஒட்டு மொத்த இந்தியாவின் GER அளவை விடக் கிட்டத்தட்ட 2 மடங்கு அதிகமாக இருக்கிறது. 2019-2020-ல் தமிழ்நாட்டின் GER 51.4%. இதுவே 2012-2013 கால கட்டத்தில் 42%. கிட்டத்தட்ட 10% உயர்ந்திருக்கிறது. அதாவது, 2019-2020-ல் 18-23 வயதுள்ள இளைஞர்கள் 35.2 லட்சம் பேர் உயர் கல்வியில் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் விரிவான தகவல்கள் இனிதான் வரவேண்டும். ஆனாலும், தமிழகம் தன்னுடைய இடத்தை தக்க வைத்திருக்கிறது என்பது உண்மை.

புடவைக் கட்டும் பொழுது பெண்கள் செய்யக்கூடாத 9 தவறுகள்!

நிமிர்ந்த நடைக்கு ஆதாரமான முதுகெலும்பை பராமரிக்க 10 எளிய வழிகள்!

புதுமைக்கொரு எடுத்துக்காட்டு; துணிச்சலுக்கு ஓர் அடையாளம் - HBD பார்த்திபன் Sir!

நிக்ரஹம் செய்யத் தெரியாதவள்!

இரை தந்த இறைவனுக்கு இரையாலேயே அபிஷேகம்!

SCROLL FOR NEXT