Avatar 2 
செய்திகள்

தமிழ்நாட்டில் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்?

கல்கி டெஸ்க்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் உலகெங்கும் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது. அதை தொடந்து தற்போது அதன் இரண்டாம் பாகம் உலகெங்கும் திரையரங்கில் வெளிவரயிருக்கிறது. ஏறக்குறைய 13 ஆண்டுகள் கழித்து வெளியாகவும் இப்படத்தினை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளநர். இந்த நிலையில் இத்திரைப்படம் தமிழகத்தில் வெளியாவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளது.

தி வே ஆஃப் வாட்டர் என்ற அவதார் படத்தின் 2-ம் பாகத்தை, ஜேம்ஸ் கேமரூனுடன் இணைந்து ஜான் லாண்டாவ் தயாரித்துள்ளார். இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் 3டி-யில் 160 மொழிகளில் டிசம்பர் 16-ஆம் தேதி பிரம்மாண்டமாகத் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

Avatar 2

தமிழ்நாட்டில் இப்படத்தை தமிழ் டப்பிங்கில் வெளியிடும் விநியோக நிறுவனம், திரையரங்குகளிடம் 70 சதவீத தொகையை கேட்பதாக, திரையரங்கு உரிமையாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் ஸ்ரீதர், இவ்விவகாரம் தொடர்பாக அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க உள்ளதாக கூறினார். இதனால் அவதார்-2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் படம் வெளியாகி கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கடந்து விட்டன. இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இதை எவர் கிரீன் வெற்றிப்படமாக உலக ரசிகர்கள் ஆக்கினார்கள். தற்போது அதன் அடுத்த பாகத்தை இயக்கி முடித்துள்ளார் ஜேம்ஸ் கேமரூன்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT