EB
EB
செய்திகள்

ஆதார் எண்ணுடன் மின் இணைப்புகளை இணைக்க இன்னும் இரண்டு நாட்களே அவகாசம்!

கல்கி டெஸ்க்

ஆதார் கார்டு எண்ணுடன் மின் இணைப்புகளை இணைக்கும் பணி தமிழகத்தில் தற்போது வரை நடைபெற்று வருகிறது. தமிழக அரசு ஆன்லைன் மூலம் மற்றும் இதற்கென சிறப்பு முகாம்களை தமிழ் நாடு மின்வாரியம் அமைத்து இந்த இணைக்கும் பணியை மேற்கொண்டு வந்தது.

இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இருந்தால் விரைவில் இணைத்துவிடுங்கள்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பை வெளியிட்டது.

Aadhar card

ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த நவம்பர் 15ம் தேதி துவங்கப்பட்டது. 2 கோடியே 67 லடசம் மின் நுகர்வோர் தங்கள் ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்ணை இணைக்க முதலில் டிசம்பர் 31ம் தேதி வரை அவகாசம் இருந்தது. பின்னர் இது ஜனவரி 31-தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆதாருடன் மின் இணைப்பை சேர்ப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இருந்தால் விரைவில் இணைத்து விடுங்கள் என கூறப்படுகிறது.கால அவகாசம் நீட்டிப்பு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கொன்றை பூவின் ஆரோக்கிய மகத்துவம் தெரியுமா?

உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?

Remote Work: தொழில்நுட்பமும், தொலைதூர வேலைகளும்! இதுதான் எதிர்காலமா? 

18 முறை படையெடுத்தும் 6 முறை தரைமட்டமாகியும் மீண்டெழுந்த ஆலயம்!

Managing Debts: சாமானியர்களுக்கான கடன் நிர்வாக யுக்திகள்! 

SCROLL FOR NEXT