உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் அன்பையும், காதலையும் கொண்டாடும் நாள் தான் இந்த காதலர் தினம். நேற்று உலக காதலர் தினம் உலகெங்கும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. உலக காதலர் முதல் உள்ளூர் காதலர் வரை தங்கள் இணையருக்கு ரோஜாப்பூக்கள், வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் என தந்து அசத்தி மகிழ்ந்திருந்தனர்.
வர்த்தக நோக்கத்திற்காக இந்த தினம் உலகம் முழுவதும் பரவி தற்போது ஒரு வாரமே காதல் வாரமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது என பலர் முணுமுணுத்தாலுமே வருடாவருடம் காதலர் தினம் களைகட்டி வருவதை மறுக்க முடியாது. சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடும். காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் புதிய டூடுல் வெளியிட்டுள்ளது.
நேற்று காதலர் தினத்தையொட்டி கூகுள் அழகான டூடுல் ஒன்றினை தந்து அசத்தியிருந்தது. கூகுள் வெளியிட்ட அழகான டூடுல் அனை வரையும் பெருமளவு ஈர்த்திருந்தது. தற்போது இளைஞர்கள் மத்தியில் சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளானது.
ஒவ்வொரு நாளும் கூகுள் தனது தேடுதளத்தில் அந்தந்த நாளின் சிறப்பை எடுத்துக் கூறும் விதமாக தனது டூடுலை மாற்றி அமைக்கும் வகையில் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தனது அழகான டூடுலை வெளியிட்டு அசத்தியது.
கூகுள் நிறுவனம் அழகான இரண்டு தண்ணீர் துளிகள் ஒன்றிணைந்து ஒரு துளியாக சங்கமித்தது போல டூடுல் அமைத்திருந்தது பலரையும் கவர்ந்திழுத்தது. அந்த பேக் ரவுண்ட் கலரை பேபி பிங்க் கலரில் வடிவமைத்தது இன்னும் சிறப்பாக இருந்தது. இந்த காதலர் தினத்தை கூடுதல் அழகாக்கிய கூகுளின் ’டூடுல்’ பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.