செய்திகள்

‘அதிமுக ஒன்றுசேரக் கூடாது என திமுக செயல்படுகிறது’ வி.கே.சசிகலா விமர்சனம்!

கல்கி டெஸ்க்

சென்னை, தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, “திமுக ஆட்சி அமைந்தது முதல் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதோ சந்தைக்குப் போவது போல ஒவ்வொரு நாளையும் நகர்த்தி வருகின்றனர். திரையரங்குக்கு வந்து செல்வது போல் சட்டப்பேரவைக்குத் வந்து செல்கின்றனர். அதிமுகவில் நடைபெறும் உட்கட்சி பூசலை திமுக பயன்படுத்தி வருகிறது. அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேரக்கூடாது என திமுக செயல்பட்டு வருகிறது. அதனால் ஓபிஎஸ் விவகாரத்தில் சட்டசபையில் திமுக இரட்டை வேடம் போடுகிறது.

என்னை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டால் நிச்சயம் அவரை சந்திப்பேன். அதேசமயம், திருச்சியில் நடைபெறும் மாநாட்டுக்கு ஓபிஎஸ் எனக்கு அழைப்பு விடுத்தால் அவசியம் அதில் கலந்து கொள்வேன். கொடநாடு வழக்கை திமுக அரசியலுக்காகப் பயன்படுத்துகிறது. வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், நான் ஜாதி அரசியல் செய்யவில்லை. ஜாதி பார்த்து அரசியல் செய்திருந்தால் ஒரு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சர் ஆக்கி இருக்க மாட்டேன்” என அவர் கூறி உள்ளார்.

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ளும் வழிமுறைகள்! 

SCROLL FOR NEXT