கேந்திரிய வித்யாலயா பள்ளி
கேந்திரிய வித்யாலயா பள்ளி  
செய்திகள்

மத்திய ஆசிரியர் பணியில் சேர வேண்டுமா? விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கல்கி டெஸ்க்

மத்திய ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க  இன்றே கடைசி நாள் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா போன்ற மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர சிபிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியம்.

இந்த தேர்வானது வருகின்ற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என ஏற்கனவே  மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது

இந்நிலையில் இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தேதி (நவம்பர் 24)  என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான www.ctet.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பேறு வரம் அருளும் அபூர்வ விருட்சம் அமைந்த கோயில்!

Minimalism: மினிமலிசத்தைக் கடைப்பிடிப்பதால் இவ்வளவு நன்மைகளா? 

மனதுக்கு குற்ற உணர்வை தரும் பிழைகள்!

Sea Moss: தைராய்டை குணப்படுத்தும் கடல் பாசி! 

தியாகராய நகரில் சாலையோர கடைகளை அகற்றிய மாநகராட்சி ஊழியர்கள்!

SCROLL FOR NEXT