ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேன்பெரா நகரில் அந்நாட்டு நாடாளுமன்ற இல்லம் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண நிறத்தில் ஒளிரும் வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துகொண்டு நேற்று ஆஸ்திரேலியாவின் கேன்பெரா நகருக்கு சென்றார்.
அங்கு அந்நாட்டு நாடாளுமன்ற இல்லம் இந்திய தேசியக் கொடி மூவர்ணத்தில் ஒளியூட்டப்பட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்ததாவது:
நமது தேசிய்க கொடியின் மூவர்ண வரவேற்புடன் கேன்பெரா வந்தடைந்து உள்ளேன். ஆஸ்திரேலியாவின் பழைய நாடாளுமன்ற இல்லம் நம்முடைய தேசிய கொடியின் வண்ணத்தில் ஜொலிப்பதைக் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற 13-வது இந்திய – ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். பின்னர் ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னிவாங், மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இருவரும் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பை இரு நாடுகளின் கடற்படைகள் மூலம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
-இவ்வாறு இரு நாட்டு அமைச்சர்களும் தெரிவித்தனர்.