செய்திகள்

சென்னையில் உணவு திருவிழா எங்கு? எப்போது?

க.இப்ராகிம்

ருசியான உணவுகளைத் தேடிச்செல்லும் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கக்கூடிய நிலையில், பலதரப்பட்ட உணவுகளை ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் உணவு திருவிழாவை தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை கழகம் இணைந்து சென்னையில் நடத்துகிறது.

உணவு, உடலுக்கான அடிப்படைத் தேவை. அதிலும் ருசியான உணவு என்றால் கூடுதல் சிறப்புதான். இன்னும் பல வகையான உணவுகள் ஒரே இடத்தில் கிடைத்தால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டுவிடும். முன்பைக் காட்டிலும் தற்போது மக்கள் ருசியான உணவை தேடிச் சென்று உண்ணத் தொடங்கி விட்டனர். அதன் வெளிப்பாடே சமூக வலைதளங்களில் தற்போது ஃபுட் ரிவ்யூ அதிக மக்களால் பார்க்கப்படுவதற்குக் காரணம். அதிகமான பாலோயர்ஸ்கள், கமெண்டுகள், ஷேர்கள் குவிந்தவண்ணம் இருப்பதால் தமிழில் பல்வேறு சமூக வலைதளங்களில் தினம் தினம் ஒரு ஃபுட் ரிவியூவர் உருவாகி வருகிறார்.

இந்த நிலையில், மக்கள் ருசியான உணவைத் தேடிச் செல்ல தேவையில்லை, ஒரே இடத்தில் பலதரப்பட்ட உணவுகள் கிடைக்க வழி ஏற்படுமானால் அது மக்களுக்குக் கொண்டாட்டமே. அதுவும் அதை அரசே நடத்தும்பொழுது கூடுதல் நம்பகத்தன்மை ஏற்படும்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருவதை முன்னிட்டு வரும் செப்டம்பர் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களும் சென்னை தீவுத்திடலில் உணவுத் திருவிழாவை நடத்த உணவு பாதுகாப்புத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை கழகம் முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இந்த உணவுத் திருவிழாவில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய உணவுப் பொருட்கள், சிறுதானிய உணவு வகைகள், பிரியாணி வகைகள், பல்வேறு புகழ் பெற்ற உணவகங்களின் ஸ்டால்கள், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த உணவு வகைகள், பாரம்பரிய உணவுகள் மற்றும் துரித உணவுகள், குளிர்பான வகைகள் என்று ஒட்டுமொத்த உணவுப் பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடைபெற இருக்கிறது. மேலும், மக்களின் வசதிக்காக வாகனம் நிறுத்துமிடம், பொழுதுபோக்கு நிகழ்வுகளும் அந்த உணவுத் திருவிழாவில் அமைய உள்ளது சிறப்பு.

மகாலட்சுமி தாயாருக்கு தீபாவளி சீர் கொடுக்கும் ஆலயம் எங்குள்ளது தெரியுமா?

சந்தையில் வலம் வரும் போலி பனீர்… ஜாக்கிரதை மக்களே! 

தார்வாட் பேடா: கர்நாடகாவின் சுவை நிறைந்த இனிப்பு!

நாங்கள் கொண்டாடிய சாகச தீபாவளி!

நாக்கில் உள்ள புண்ணை விரைவில் குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்! 

SCROLL FOR NEXT