மெகபூபா முப்தி சயீத்
மெகபூபா முப்தி சயீத் 
செய்திகள்

வகுப்பு மோதலை தூண்டுவது யார்? பா.ஜ.க.வுக்கு மெஹ்பூபா அதிரடி கேள்வி!

ஜெ.ராகவன்

கடந்த 2015 ஆம் ஆண்டில் பா.ஜ.க.வும் மக்கள் ஜனநாயக கட்சியும் (பிடிபி) காஷ்மீரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. இதையடுத்து பிடிபி கட்சியின் தலைவர் மெஹ்பூபா முப்தி முகது சய்யீத் முதல்வரானார்.

ஆனால், மெஹ்பூபாவுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளை அடுத்து கூட்டணி கட்சியான பா.ஜ.க. கடந்த 2018 இல் ஆதரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து முதல்வர் மெஹ்பூபா முப்தியின் ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்து வருகிறது.

மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக பல காலமாக நீடித்து வரும் மெஹ்பூபா முப்தி சய்யீத், தொடர்ந்து மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சியையும், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தையும் அடிக்கடி விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் மெஹ்பூபா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜம்மு காஷ்மீரில் நிலைமைய கட்டுக்குள் கொண்டுவர பா.ஜ.க. அரசு தவறிவிட்டது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நிலைமை கட்டுக்குள் இப்பதாக பா.ஜ.க. கூறிவருகிறது. ஆனால் உண்மை நிலைமை அப்படியில்லை.

ரஜெளரி தாக்குதல் சம்பவத்தை அடுத்து கிராம பாதுகாப்பு கமிட்டிக்கு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது அங்கு நிலைமை கட்டுக்குள் இல்லை என்பதையே இது காட்டுகிறது. உள்ளூர் மக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் மூலம் வகுப்பு மோதலை உருவாக்கவே பா.ஜ.க. திட்டமிடுகிறது.

ஜம்மு காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருந்தால் ஏன் பாதுகாப்பு படையினரை அதிக அளவில் குவிக்க வேண்டும்?. உள்ளூர் மக்களுக்கு ஆயுதம் வழங்கவேண்டும்?. மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கவே பா.ஜ.க. அரசு விரும்புவதாக தெரிகிறது.

காஷ்மீர் பிரச்னைக்கு ராணுவத்தின் மூலம் ஒருபோதும் தீர்வுகாண முடியாது. அரசியல் ரிதீயில் தீர்வுகாண்பதுதான் சிறந்தது என்று பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"அண்டை நாடானா சீனா, லடாக்கில் அத்துமீறி நுழைந்து 2,000 சதுர கி.மீ. பரப்பளவை ஆக்கிரமித்தது. மேலும் எல்லைப் பகுதியில் இருந்த 20 ராணுவ வீரர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு ராணுவத்தின் மூலம் தக்க பதிலடி கொடுக்காத மத்திய அரசு, அதனுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்கிறது. ஆனால் காஷ்மீர் விவகாரத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தாமல் ராணுவத்தின் மூலம் தீர்வுகாண முயலுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர் .

மஞ்சள் காய்ச்சலின் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்!

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உண்டா? அறிஞர் அண்ணா சொன்னது என்ன தெரியுமா?

உங்க குழந்தை பிளே ஸ்கூலுக்கு போகத் தயாரா? அப்படியென்றால் இதையெல்லாம் கவனத்துல வைச்சுக்குங்க!

"திரையில் வீரத்தை காட்டுபவர் சூப்பர் மேன் அல்ல" வெப்பன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சத்யராஜ் பேச்சு!

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

SCROLL FOR NEXT