புயல்
புயல் 
செய்திகள்

'மாண்டஸ்" புயல் கனமழையை தருமா? ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

கல்கி டெஸ்க்

தற்போது அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கும். காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிசம்பர் 8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்பு 3 நாட்கள் பின் இது புயலாக மாற உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி நகர தொடங்கும். தாழ்வு மண்டலமாக இது வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடைந்து அங்கு வலிமைபெற்று மையம் கொண்டு நிற்கும். இது நிலத்தில் இருந்து நீண்ட தூரத்தில் உள்ளது.

வானிலை மையம்

புயலாக மாறுவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. இதனால் 3 நாட்களில் கண்டிப்பாக இது புயலாக உருவெடுக்கும். வங்கக் கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு 'மாண்டஸ்" என பெயர் வைக்கப்பட உள்ளது. இந்த முறை வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் பரிந்துரைத்துள்ளது

இந்த தாழ்வு பகுதிக்கு முன்பாக நேற்று கிழக்கு காற்று காரணமாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. டெல்டா மாவட்டங்களில் முக்கியமாக கனமழை பெய்தது. திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்தது.

தமிழகத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக, 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது. அதாவது சென்னை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த குழு விரைகிறது.

80 அடி உயர சிவபெருமான் சிலை எங்குள்ளது தெரியுமா?

ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகம் பேசுகிறார்கள் தெரியுமா?

ஒவ்வொன்றும் ஒரு ரகம்; தள்ளிப்போடுபவர்கள் மொத்தம் 5 ரகம்!

தமிழ் சினிமாவில் மாறாத விஷயங்கள் என எழுத்தாளர் சுஜாதா சொன்ன 20 சுவாரஸ்யமான விஷயங்கள்!

Male Heart Attack: ஆண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான 7 காரணங்கள்! 

SCROLL FOR NEXT