வட கொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும், மது அருந்துவதற்கும் அதிரடி தடை விதித்துள்ளார அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இத்தடையை மீறுவோர்க்கு மரண தண்டனை பரிசு என அறிவித்துள்ளார்.
வட கொரியா முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபரின் தந்தையுமான கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி, இந்த தடை அங்கு அமலுக்கு வந்திருக்கிறது.
வட கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிம் குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கிம் ஜாங் உன் அதிபராக பதவி வகித்து வருகிறார்.
அந்த நாட்டை பொறுத்தவரை, அரசுக்கு விருப்பமானதை தான் மக்கள் செய்ய வேண்டும். வட கொரியாவில் பஞ்சம் காரணமாக ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடு சில வாரங்களுக்கு விதிக்கப் பட்டது. மேலும் அரசு தொலைக்காட்சி மட்டுமே காண்பிக்கப் படும். மற்றபடி இணையதள வசதி, திரைப்படங்கள் என எதுவும் வட கொரியாவில் கிடையாது. துக்க வாரம்
இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி நாடே 10 நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும் என்ற நடைமுறை கடந்த 10 ஆண்டுகளாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி முதல் ஜனவரி 7-ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப் படுகிறது.
இந்த 10 நாட்களும் வட கொரிய மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. கூட்டமாக சேர்ந்த வெளியே போகக் கூடாது. பொழுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது. மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள், பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால், போலீஸாரால் கைது செய்யப்பட்டு, உடனடி பரிசாக மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.