செய்திகள்

துபாய் சர்வதேச தொழிற் கண்காட்சி: தமிழக அரங்கு இன்று திறந்துவைப்பு!

கல்கி

துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்றுள்ள நிலையில், தமிழக முத்லவர் மு.க. ஸ்டாலின் இன்று அங்கு தமிழக அரங்கை திறந்து வைப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் வெளியான தகவல்;

துபாய் நாட்டில் கடந்த அக்டோபர் 1-ம்தேதி தொடங்கப்பட்ட இந்த சர்வதேச தொழிற் கண்காட்சி ஆறு மாதங்களுக்கு, அதாவது இம்மாதம் 31-ம் தேதி வரை நடக்கிறது. இந்த உலக கண்காட்சியில், தமிழ்நாடு அரங்கில் இன்று முதல் 31-ம் தேதி வரை, தமிழ்நாடு வாரமாக அனுசரிக்கப்பட உள்ளது.

மொத்தம் 4 நாள் பயணமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தனி விமானம் மூலம் நேற்று சென்று அடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் துபாய் உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை இன்று திறந்து வைக்கிறார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு அந்நாட்டில் பயணம் செய்வதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட பிஎம்டபிள்யூ காரை துபாய் அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதிகளவு புரதச் சத்து தரக்கூடிய 6 வகை மாவுப் பொருட்கள்!

ஐயப்பனின் சபரிமலை பதினெட்டு படிகள் உணர்த்தும் தத்துவம்!

கோதுமைப் புல்லின் ஆரோக்கிய நன்மைகள்!

கார்த்திகை மாத சோமவார விரதம் மற்றும் சங்காபிஷேகம் ஏன் சிவபெருமானுக்கு விசேஷம்?

ஓ! இப்படித்தான் நம்ம உடல் வெப்பத்தை கட்டுப்படுத்துதா? 

SCROLL FOR NEXT