சாம்சங் நிறுவனத்தின் சில குறிப்பிட்ட வெர்ஷன் மாடல்களில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆக்கப்பூர்வமான தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து வரும் அதே நேரத்தில் மோசடி செய்யக்கூடிய தொழில்நுட்ப செயலிகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இணையதளங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள், குற்றங்கள் தற்போது அரசாங்கங்கள் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. இவ்வாறான இணையதள மோசடிக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் குறைபாடு கொண்டு சில மாடல் தொலைபேசிகள் இருக்கிறது என்று மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தெரிவித்து இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் தெரிவித்திருப்பது, இந்தியாவில் தொழில்நுட்ப ரீதியாக நடைபெறும் இணையதளம் மோசடிகளை தடுத்து நிறுத்த தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பின் மூலம் சாம்சங் மொபைல் போன்களில் வெர்ஷன் 11, 12, 13 ஆகியவை கொண்ட ஃபோன்களில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த குறைபாடுகள் மோசடி செய்யும் நபர்களுக்கு கூடுதல் வாய்ப்பை ஏற்படுத்தி தர கூடும். இதனால் மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் மற்றும் ஏனைய வகைகளிலும் பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
எனவே சாம்சங் வெர்ஷன் 11,12,13 ஆகியவை பயன்படுத்தும் நபர்கள் செக்யூரிட்டி அப்டேட்டை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும். பிளே ஸ்டோரை தவிர மற்ற செயலிகள் வழியாக பதிவேற்றம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் மெசேஜ், மெயில் வழியாக வரும் லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட போன் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்திருக்கிறது.